கடந்த மாதம் 16-ம் தேதி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான இறுதி தீர்ப்பில் உச்ச நீதிமன்றம், மார்ச் 29-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதா மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த 1-ம் தேதி முதல் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், மவுன போராட்டம் சாலை, ரயில் மறியல் என தொடர் போராட்டங்களை அரசியல் கட்சிகள், விவசாயா அமைப்புக்கள், இயங்கங்கள், மாணவர்கள், இளைஞர்கள், வணிகர்கள், பெண்கள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் போராட்டம் நடந்தி வருகின்றன. இதனால் தமிழகமே போராட்டக்களமாக மாறியுள்ளது.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம், அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, இன்று (10- 04-2018) நெய்வேலியில் என்,எல்,சி, முற்றுகைப் போராட்டம். மற்றும் சென்னையில் நடைபெற இருக்கும் ஐ,பி,எல், முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பு கூறியிருந்தார்.
இதையடுத்து, இன்று காலை முதல் நெய்வேலி என்.எல்.சி அனல் மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் தமிழர் வாழ்வுரிமை கட்சியினர், காவிரி உரிமை மீட்புக் குழு மற்றும் தமிழக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தின் ஒரு பகுதியாக ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் கதவை இழுத்து பூட்டு போட்டு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். மேலும் பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
Tamil Nadu: Members of Tamizhaga Vazhvurimai Katchi (TVK) protetst oustide MA Chidambaram Stadium (Chepauk Stadium) in Chennai against #IPL2018 over #CauveryManagementBoard issue. Protesters detained by police. pic.twitter.com/c5fKXGovml
— ANI (@ANI) April 10, 2018
ஐபிஎல் போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கமாண்டோ படை மற்றும் ஆயுதப்படையை சேர்ந்த போலீசார்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் படுத்தப்பட்டு உள்ளன. மொத்தம் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். ஐபிஎல் வீரர்கள் தங்கியுள்ள ஓட்டல்களுக்கு 5 அடுக்கு பாதுக்காப்பு போடப்பட்டு உள்ளது.
இன்று 8 மணிக்கு சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் போட்டி நடைபெறுகிறது.
இதனால் ஐபிஎல் போட்டி காண சேப்பாக்கம் மைதானத்துக்கு வரும் ரசிகர்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகப்படியான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.