ஸ்மார்ட்போன் என்பது தொலைதொடர்பு சாதனம் என்ற நிலை மாறி, காலை விழித்தது முதல் இரவு படுக்கும் வரை தேவைப்படும் அத்தியாவசிய பொருளாக மாறி விட்டது. சுருக்கமாக கூற வேண்டும் என்றால், இன்றைய டிஜிட்டல் உலகில், நமது வாழ்க்கையை ஸ்மார்ட்போன்கள் தான் இயக்குகின்றன.
நமது வாழ்க்கையின் இன்றியமையாத அங்கமாக மாறிப்போன ஸ்மார்ட்போனின் (Smartphones) பேட்டரி அதிக நேரம் நீடிக்காமல் மிக முக்கிய நேரத்தில் பேட்டரி காலியாவது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும். உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி அதிக நேரம் நீடிக்க சில தவறுகளை தவிர்ப்பது அவசியம். இது உங்கள் பேட்டரி நீண்ட நேரம் நீடிக்க உதவுவது மட்டுமல்லாமல், உங்கள் தொலைபேசியின் செயல்திறனையும் மேம்படுத்தும்.
போன் பேட்டரி அதிக நேரம் நீடித்து இருக்க நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை:
1. 100% வரை பேட்டரி சார்ஜ்
எப்போதுமே போனை 100% வரை போனை சார்ஜ் செய்ய முயற்சிக்காதீர்கள். ஃபோன் பேட்டரி 80% ஆகும் வரை சார்ஜ் செய்யுங்கள். முழுமையாக சார்ஜ் செய்வது பேட்டரி செல்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அவற்றின் ஆயுளைக் குறைக்கலாம்.
2. இரவு முழுவதும் சார்ஜ் செய்யாதீர்கள்
இரவு முழுவதும் சார்ஜருடன் போனை இணைத்து வைத்திருப்பதும் பேட்டரியில் தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. சார்ஜ் ஆன பிறகு அதை அகற்ற வேண்டியது அவசியம்.
3. திரையின் பிரகாசத்தை அதிகமாக வைக்கக் கூடாது
திரையின் பிரகாசத்தை அதிக அளவில் வைப்பது பேட்டரி உபயோகத்தை அதிகரிக்கிறது. ஆட்டோ பிரகாசம் அம்சத்தின் உதவியுடன், பிரகாசம் தானாகவே தேவையான அளவிற்கு சரி செய்து கொள்ளும் ஆட்டோ ப்ரைட்னஸ் அம்சத்தை ஆக்டிவேட் செய்யலாம். கூடுதலாக, உங்கள் விருப்பப்படி பிரகாசத்தை செட் செய்யலாம்.
4. தேவையற்ற நோட்டீஃபிகேஷன்களை அணைக்கவும்
ஒவ்வொரு செயலிக்கும் நோட்டிஃபிகேஷன்களை ஆக்டிவேட் செய்வது பேட்டரி பயன்பாட்டை அதிகரிக்கிறது. அத்தியாவசிய செயலிகளை அறிவிப்புகளை மட்டும் ஆக்டிவேட் செய்யவும்.
மேலும் படிக்க | கூகுள் மேப்ஸ் நம்பி சென்ற 3 பேர் பலி... பாதுகாப்பாக பயன்படுத்த சில டிப்ஸ்
5. பின்னணியின் இயங்கும் செயலிகளை மூடவும்
நீங்கள் பயன்படுத்தாத செயலிகளை பின்னணியில் இயங்குவதை நிறுத்தவும். இந்த ஆப்ஸ் பேட்டரி உபயோகத்தை அதிகரிக்கிறது.
6. இருப்பிடச் சேவைகளை ஆஃப் செய்யவும்.
உங்களுக்கு இருப்பிடச் சேவைகள் தேவையில்லாதபோது, அவற்றை ஆஃப் செய்யவும். இந்த சேவைகள் பேட்டரி பயன்பாட்டை கணிசமாக அதிகரிக்கின்றன. மேலும், நீங்கள் புளூடூத் மற்றும் வைஃபை பயன்படுத்தாதபோது, அவற்றை அணைக்கவும்.
7. அதிக வெப்பம் போனில் படுவதை தவிர்க்கவும்
நேரடி சூரிய ஒளியில் அல்லது சூடான இடத்தில் தொலைபேசியை வைக்க வேண்டாம். இது பேட்டரியை சேதப்படுத்தலாம்.
8. ஒரிஜினல் சார்ஜரைப் பயன்படுத்தவும்
பேட்டரி ஆயுளை நீட்டிக்கவும், அதன் திறனை அதிகரிக்கவும் உங்கள் மொபைலை சார்ஜ் செய்ய எப்போதும் அசல் சார்ஜரை பயன்படுத்தவும். மற்ற சார்ஜர்கள் பேட்டரியை சேதப்படுத்தலாம்.
மேலும் படிக்க | போன் ஸ்டோரேஜ் அடிக்கடி நிரம்பி விடுகிறதா... எதையும் நீக்காமலேயே சிக்கலை தீர்க்கலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ