கொரோனா வைரஸைப் பற்றிய வதந்திகள் அதிக அளவில் பரவி மக்களை குழப்பி வருகிறதும். கொரோனா தொற்றுநோய் பற்றிய தவறான தகவல்களை பரப்புவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, முகநூல், ஒரு தனிப்பட்ட பிரிவை தொடங்க உள்ளது.
புதுடெல்லி: தொற்றுநோய் குறித்த தவறான தகவல்களை பரப்புவதைக் கட்டுப்படுத்த அடுத்த வாரம் தனது சமூக ஊடகத்தில் ‘கோவிட் -19 பற்றிய உண்மைகள்’- அதாவது ‘Facts About Covid-19’ என்ற ஒரு பிரத்யேக பிரிவைத் தொடங்கப்போவதாக Facebook அறிவித்துள்ளது. இதையும் படியுங்கள் - வாட்ஸ்அப்-பேஸ்புக் சட்டவிரோதமாக
ப்ளீச் குடித்தால் கொரோனா போய் விடும், ஹைட்ராக்ஸி க்ளோரோக்வீன் (hydroxychloroquine) எடுத்துக் கொண்டால் தொற்று நீங்கும், போன்ற பல கட்டுக்கதைகள் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு, குழப்பம் ஏற்படுத்தப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பு (WHO), இது போன்ற பல வதந்திகளை அடையாளம் காணப்பட்ட பல வதந்திகளை போக்கி, மக்கள் மத்தியில் உண்மை தகவல்கள் கொண்டு சேர்க்கப்படும் என முகநூல் நிறுவனம் ஒரு அறிக்கையில் கூறியது.
ALSO READ | வெட்கப்படுகிறோம், வேதனைப்படுகிறோம்: மன்னிப்பு கேட்ட Twitter..!!!
இது தொற்றுநோய் பற்றிய தவறான தகவல்களை எதிர்த்துப் போராடுவதற்கான எங்க முயற்சி என அந்நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் கொரோனாவிலிருந்து தங்களை பாதுக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த தகவல்கள், தொற்று நோய் குறித்த விழிப்புணர்வு அகியவை வழங்கப்படும் எனவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
இதற்கிடையில், ஃபேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) கோவிட் -19 தொற்றுநோயை டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) நிர்வாகம் சரியாக கையாளவில்லை என குறை கூறியுள்ளார்.
பல வளரும் நாடுகளுடன் ஒப்பிடும்போது , தன்னை சூப்பர் பவர் என கூறிக் கொள்ளும் அமெரிக்கா, கொரோனா தொற்றை மோசமாக கையாண்டுள்ளது என அவர் விமர்சித்தார்.
ALSO READ | வீடு தேடி வரும் மருத்துவமனை…. கொரோனாவிற்கு ஆப்பு வைக்கும் IIT …!!!