195 ரூபாய்க்கு Apple One! அதிர வைக்கும் விலைப் பட்டியல்

பண்டிகைக் காலங்களில் வழக்கமாகவே அதிரடி ஆஃபர்களை அனைவரும் வழங்குவார்கள். அதிலும் ஆப்பிள் ஒன் வழங்கியிருக்கும் இந்தியாவுக்கான இந்த சலுகை அதிரடியாக இருக்கிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 4, 2020, 04:21 PM IST
  • Apple One பயன்படுத்துவதற்க்கு மாதக் கட்டணம் ரூ.195
  • ஃபேமிலி பேக் மாதம் 365 ரூபாய்.
  • ஃபேமிலி பேக்கில், 200 GB iCloud storage கிடைக்கும்.
195 ரூபாய்க்கு Apple One! அதிர வைக்கும் விலைப் பட்டியல் title=

பண்டிகைக் காலங்களில் வழக்கமாகவே அதிரடி ஆஃபர்களை அனைவரும் வழங்குவார்கள். அதிலும் ஆப்பிள் ஒன் வழங்கியிருக்கும் இந்தியாவுக்கான இந்த சலுகை அதிரடியாக இருக்கிறது.

ஆப்பிள் ஒன் சேவை முதல் மாதத்திற்கு இலவசம். தொடர்ந்து சேவையைப் பயன்படுத்த விரும்பினால், கட்டணம் செலுத்தி உபயோகிக்கலாம்.

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ‘Apple One compiled service’ சில நாட்களுக்கு முன் இந்தியாவில் அறிமுகமானது. ஆப்பிளின் மியூசிக், டிவி +, ஆர்கேட் மற்றும் ஐ-க்ளவுட் சேமிப்பகம் (Apple Music, Apple TV +, Apple Arcade and iCloud storage) அடங்கிய தொகுப்பு இது.  அதாவது, Apple One-ஐ தேர்வு செய்தால் இந்த சேவைகளுக்கான கட்டணத்தை தனித்தனியாக செலுத்த வேண்டியதில்லை.

இந்தியாவில், Apple One பயன்படுத்துவதற்க்கு மாதக் கட்டணம் ரூ.195 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இதுவே ஃபேமிலி பேக் என்றால், இந்தத் திட்டத்தின் படி மாதம் 365 ரூபாய் செலுத்த வேண்டும்.  இந்த சேவையை எப்போது வேண்டுமானாலும் ஆக்டிவேட் செய்துகொள்ளலாம். ஆப்பிள் ஒன் சேவை, இந்தியா உட்பட எல்லா நாடுகளிலும் கிடைக்கிறது.  ஃபேமிலி பேக்கில், 200 GB iCloud storage கிடைக்கும்.  இதை ஆறு குடும்ப உறுப்பினர்கள் வரை பகிர்ந்து கொள்ளலாம். இதைத் தவிர பிரத்யேக திட்டங்களுக்கு ஏற்றவாறு சேவைகள் மாறுபடும்.  

ஆப்பிள் மியூசிக் மாதம் 49 ரூபாய்க்கு மாணவர்களுக்கு கிடைக்கும். இதுவே தனிநபர்களுக்கு மாதம் 99 ரூபாய்க்கும், ஃபேமிலி பேக்கில் குடும்ப உறுப்பினர்களுக்கு மாதம் 149 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் டிவி + மற்றும் ஆப்பிள் ஆர்கேட் கட்டணம் மாதம் 99 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
iCloud, 50 ஜிபி மாதம் 75 ரூபாய்க்கும், 200 ஜிபி மாதம் 219 ரூபாயாகவும், 2TB -க்கு மாதம் 749 ரூபாய் எனவும் கட்டணம்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

Apple One-ஐ subscription செய்வது சுலபமானது.  ஆப்பிள் ஆப் ஸ்டோருக்குச் சென்று சுயவிவரப் படத்தைக் கிளிக் செய்ய வேண்டும். பின்னர் subscription என்ற தெரிவை கிளிக் செய்து, Get Apple One" என்பதன் கீழ் "Try Now" என்ற தெரிவை க்ளிக் செய்யவும். முதல் மாத ஆப்பிள் ஒன் சேவையை இலவசம், தொடர்ந்து சேவையைப் பயன்படுத்த விரும்பினால், கட்டணம் செலுத்தி உபயோகிக்கலாம்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News