Flipkart Mobiles Year End Sale: ஐபோன் பிரியரா நீங்கள்? நீண்ட நாட்களாக புதிய iPhone 15 ஐ வாங்க காத்திருக்கிறீர்களா? அப்படியென்றால் இப்போது உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட், உங்களுக்காக Mobiles Year End Sale -இல் ஒரு அற்புதமான சலுகையை கொண்டு வந்துள்ளது.
ரூ.69,900 விலை கொண்ட iPhone 15 இன் 128GB அடிப்படை மாறுபாடு இப்போது Flipkart இல் ரூ.59,999க்கு கிடைக்கிறது. இந்த ஃபோன் ரூ.9,901 பிளாட் தள்ளுபடியைப் பெறுகிறது. இது ஆப்பிளின் முந்தைய தலைமுறை ஸ்டாண்டர்ட் ஃபிளாக்ஷிப் மாடலுக்கான மிகப்பெரிய சலுகையாக பார்க்கப்படுகின்றது.
ஆனால், இதில் கிடைக்கும் சலுகைகள் இதனுடன் முடியவில்லை. வாடிக்கையாளர்கள் பச்சை நிற மாறுபாட்டை வாங்கினால், பிளிப்கார்ட்டில் அதை ரூ.58,999 என்ற குறைந்த விலையில் வாங்கலாம். குறிப்பிட்ட நிறத்தை வாங்க விரும்புவோருக்கு ரூ.1,000 கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது.
கூடுதலாக, உங்கள் பழைய ஃபோனை மாற்ற முன்வந்தால், இன்னும் அதிகமாகச் சேமிக்கலாம். இந்த ஆஃபரில் பரிமாற்ற சலுகையும், அதாவது எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் கிடைக்கின்றது. Flipkart இன் எக்ஸ்சேஞ்ச் சலுகையில் பரிமாற்றப்படும் போனைப் பொறுத்து ரூ.56,500 வரை தள்ளுபடி பெற முடியும்.
மேலும் படிக்க | Budget 2025 எதிர்பார்ப்புகள்... செல்போன்கள் விலை குறைய வாய்ப்பு
எந்த போனில் எவ்வளவு எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி கிடைக்கும்?
- உங்கள் பழைய iPhone 12 ஐ மாற்றினால், 22,700 ரூபாய் வரை தள்ளுபடி பெறலாம்.
- பழைய Samsung Galaxy S22 ஐ மாற்றினால், 20,300 ரூபாய் வரை தள்ளுபடி பெறலாம்.
அதாவது எக்ஸ்சேஞ்ச் செய்யப்படும் போனுக்கு ஏற்றவாறு, நீங்கள் ஐபோன் 15 இன் விலையை கணிசமாகக் குறைக்கலாம். புதிய ஐபோனுக்கு அப்கிரேட் ஆக நினைக்கும் மக்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு.
ஐபோன் 15 ஐ இப்போது வாங்கலாமா வேண்டாமா?
இப்போது இந்த டீலை பற்றி நீங்கள் தெரிந்துகொண்ட பின்னர், ஐபோன் 15 -ஐ இப்போது வாங்குவது சரியா என்ற மிகப்பெரிய கேள்வி உங்களுக்கு இருக்கும். ஐபோன் 15 ஆப்பிளின் A16 பயோனிக் சிப் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இது சிறந்த செயல்திறனை வழங்குகிறது. நீங்கள் கேமிங் செய்தாலும், ரீல்களை எடிட்டிங் செய்தாலும் அல்லது பிரவுசிங் செய்தாலும், இந்த ஃபோன் சிறந்த அனுபவத்தை வழங்குகிறது.
இந்த ஐபோனில் OLED டிஸ்ப்ளே உள்ளது. கூடுதலாக, ஐபோன் 15 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸைக் கொண்டுள்ளது. இது குறைந்த வெளிச்சத்திலும் மிக நேர்த்தியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் கேப்சர் செய்கிறது. புகைப்படம் எடுப்பதில் அதிக ஆர்வம் கொண்டுள்ள பயனர்களுக்கு, இந்த போன் மிகவும் சரியான தேர்வாக இருகும். இந்த டீலின் மூலம் ஃபோனின் விலை மிகவும் குறைந்துள்ளது. ஆகையால், இந்த போனை வாங்க இது சிறந்த வாய்ப்பாக பார்க்கபடுகின்றது.
மேலும் படிக்க | TRAI புதிய விதிகள்... மற்றொருவரின் பெயரில் சிம்கார்டு வாங்கினால் கடும் நடவடிக்கை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ