இலவச விமான டிக்கெட்: ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் முன்பே, டிக்கெட் கன்பார்ம் ஆகுமா, இல்லையா என்ற பயம் இருக்கும். டிக்கெட் காத்திருப்பில், அதாவது வெயிட்டிங்கில் இருந்தால், ஃபைனல் சார்ட் வரும்போது டிக்கெட் கன்ஃபர்ம் ஆக வேண்டும் என காத்திருப்போம். நாம் கண்டிப்பாக பயணிக்க வேண்டி இருந்து, டிக்கெட் கன்ஃபர்ம் ஆகவில்லை என்றால், கூட்ட நெரிசலில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். ஆனால், இந்த இன்னல்களுக்கு தீர்வாக ஒரு ஆப், அதாவது ஒரு செயலி வந்துள்ளது.
இப்போது ரயில் டிக்கெட் உறுதி செய்யப்படாவிட்டால் IRCTC பயணிகளுக்கு இலவச விமான டிக்கெட் கிடைக்கும். ஆம்!! இது அச்சரியமளிக்கும் வகையில் இருந்தாலும், இது உண்மையான செய்திதான். இந்த சலுகையை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ரயில் டிக்கெட் கன்ஃபர்ம் ஆகவில்லை என்றால், இலவச விமான டிக்கெட் கிடைக்கும்:
இந்தியா டுடேயில் வெளியான செய்தியின்படி, டிக்கெட் முன்பதிவு செயலியான TrainMan அற்புதமான இந்த சலுகையை வழங்கியுள்ளது. ட்ரெயின்மேன் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பயன்பாடு பயணிகளுக்கு ரயில் பயண உத்தரவாதத்தை வழங்குகிறது. ரயில் டிக்கெட்டுகள் உறுதி செய்யப்படாவிட்டால், பயணிகள் தங்கள் பயணத்தை மேற்கொள்ளும் வகையில் நிறுவனம் இலவச விமான டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ஐபோன் மாடலில் வெளியாகியிருக்கும் லாவா! ரூ.10 ஆயிரம் இருந்தா போதும் பாஸ்..
Trip Assurance அம்சம்
TrainMan ஆப் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் பெயர் 'டிரிப் அஷ்யூரன்ஸ் (Trip Assurance)'. இந்த புதிய அம்சம், காத்திருப்புப் பட்டியலில் (வெயிட்டிங் லிஸ்ட்) டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் தங்கள் பயணத்தை முடிக்க உத்தரவாதமான வழியை உறுதி செய்கிறது. செயலியில் டிக்கெட்டை முன்பதிவு செய்த பிறகு பயனர் நிலையை சரிபார்க்கலாம். சார்ட் தயாரிக்கப்பட்ட பின்னரும், டிக்கெட் உறுதி செய்யப்படாவிட்டால், கடைசி நிமிட மாற்றுப் பயண விருப்பங்களைத் தேடி, முன்பதிவு செய்ய ட்ரிப் அஷ்யூரன்ஸ் பயணிகளுக்கு உதவும்.
விமான டிக்கெட் எப்படி வழங்கப்படும்
பயணிகளின் டிக்கெட் முன்கணிப்பு மீட்டர் 90 சதவிகிதம் அல்லது அதற்கு மேல் இருந்தால், TrainMan ட்ரிப் அஷ்யூரன்ஸ் கட்டணமாக 1 ரூபாய் பெற்றுக்கொள்ளும். 90 சதவிகிதத்திற்கும் குறைவாக இருந்தால், டிக்கெட்டின் வகுப்பின் அடிப்படையில் செயலி கட்டணம் வசூலிக்கும்.
சார்ட் தயாரிக்கப்பட்ட பிறகு டிக்கெட் உறுதி செய்யப்பட்டால், Trip Assurance கட்டணம் பயணிகளுக்குத் திருப்பித் தரப்படும். டிக்கெட் உறுதி செய்யப்படவில்லை என்றால், TrainMan செயலி பயணத்தை மேற்கொள்ள பயணிகளுக்கு இலவச விமான டிக்கெட்டை வழங்கும். இருப்பினும், 'டிரிப் அஷ்யூரன்க்' அம்சம் விமான நிலையம் உள்ள நகரங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | IMEI எண் மூலம் உங்களின் தொலைந்த மொபைலை லாக் செய்வது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR