உக்ரைனில் உள்ள பயனர்களின் பாதுகாப்பை முன்னிட்டு, வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகளை வழங்கும் சேவையை கூகுள் தொடங்கியிருக்கிறது.
உக்ரைனுக்கு உதவ, கூகுள் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மதிப்புமிக்க புதுப்பிப்பை அறிவித்துள்ளது. உக்ரைனில் உள்ள ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வான்வழித் தாக்குதல் விழிப்பூட்டல்களைத் தொடங்கும் புதுப்பிப்பை தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் வெளியிட்டுள்ளது.
வான்வழி தாக்குதல் எச்சரிக்கை அமைப்பை வெளியிடத் தொடங்கியுள்ள கூகுளின் இந்த சேவை ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு உதவியாக இருக்கும்.
கூகுள் இன் இன்ஜினியரிங் துணைத் தலைவர் டேவ் பர்க் (Dave Burke) இந்த செய்தியை ட்வீட்டர் மூல தெரிவித்துள்ளார்.
Tragically, millions of people in Ukraine now rely on air strike alerts to try get to safety. Working with the Ukrainian government, we're rolling out a rapid Air Raid Alerts system for all Android phones in Ukraine. https://t.co/tCzs0eI9iW 1/3
— Dave Burke (@davey_burke) March 10, 2022
உக்ரைனில் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு உதவுவதாகவும், விமானத் தாக்குதல் எச்சரிக்கை அமைப்பை உருவாக்குவதாகவும் கூறினார்.
"பூகம்ப எச்சரிக்கைகளுக்காக நாங்கள் உருவாக்கிய எச்சரிக்கை பொறிமுறையை இந்த அமைப்பு பயன்படுத்துகிறது. வான்வழித் தாக்குதல் அமைப்பும் கூடுதலாக உள்ளது மற்றும் நாட்டின் தற்போதைய விமானத் தாக்குதல் எச்சரிக்கை அமைப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் எச்சரிக்கைகளையும் கூகுள் பயனர்களுடன் பகிர்ந்து கொள்கிறது,” என்று பர்க் ட்வீட் செய்துள்ளார்.
மேலும் படிக்க | உக்ரைன் நெருக்கடி இந்தியா- ரஷ்யா உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா?
நிறுவனம் தனது வலைப்பதிவு இடுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளது: அச்சுறுத்தல் பகுப்பாய்வு குழு (Threat Analysis Group) உக்ரைன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பயனர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துகிறது.
மேலும், உக்ரேனிய பயனர்களுக்கு நூற்றுக்கணக்கான அரசாங்க ஆதரவு தாக்குதல் எச்சரிக்கைகளை 12 மாதங்களாக வழங்கிவந்துளது. கூடுதலாக, போலந்தில் அதிகரித்த முதலீட்டின் ஒரு பகுதியாக, போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்க கூகுளின் இடங்களையும் வளங்களையும் கூகுள் பயன்படுத்துகிறது என்று வலைப்பதிவு இடுகையில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
"கோரிக்கையின் பேரிலும், உக்ரைன் அரசாங்கத்தின் உதவியுடன், உக்ரைனில் ஆண்ட்ராய்டு போன்களுக்கான விரைவான ஏர் ரெய்டு எச்சரிக்கை அமைப்பை உருவாக்கத் தொடங்கியுள்ளோம்" என்று வாக்கர் குறிப்பிட்டுளார்.
மேலும் படிக்க | உக்ரைனுக்கு புதுவிதமாக உதவும் பிரபல வெப்சைட்
"இந்த வேலை நாட்டின் தற்போதைய வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை அமைப்புகளுக்கு துணைபுரிகிறது மற்றும் உக்ரைனிய அரசாங்கத்தால் ஏற்கனவே வழங்கப்பட்ட எச்சரிக்கைகளின் அடிப்படையிலானது" என்று கூகுளின் உலகளாவிய விவகாரங்களின் தலைவர் கென்ட் வாக்கர் கூறினார்.
தற்போது கூகுள் நிறுவனம் ரஷ்யாவில் விளம்பரங்களை இடைநிறுத்தியுள்ளது.
இதில் அனைத்து ரஷ்ய அடிப்படையிலான விளம்பரதாரர்களுக்கான உலகளாவிய சொத்துகள் மற்றும் நெட்வொர்க்குகளில் விளம்பரங்கள், புதிய கிளவுட் பதிவுகள், பெரும்பாலான சேவைகளுக்கான கட்டணச் செயல்பாடுகள் மற்றும் ரஷ்யாவில் உள்ள YouTube பார்வையாளர்களுக்கான பணமாக்குதல் அம்சங்கள் ஆகியவை அடங்கும்.
தேடல், ஜிமெயில் மற்றும் யூடியூப் போன்ற இலவச சேவைகள் இன்னும் ரஷ்யாவின் செயல்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி போலந்தில் தஞ்சம் புகுந்தார்; ரஷ்யா பரபரப்பு தகவல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR