தொழில்நுட்ப நிறுவனத்திற்கான ஒரு அரிய நடவடிக்கையாக, கூகிளில் 400 பொறியாளர்கள் குழு ஒன்று சேர்ந்து ஒரு ஊழியர் சங்கத்தை உருவாக்கியுள்ளது. கலிஃபோர்னியாவில் தடையற்ற சந்தை (Free Market) மற்றும் தொழிற்சங்க எதிர்ப்பு (anti-union) முகாம் இப்போது கூகிளில் ஒழுங்கமைக்கப்பட்ட செயல்பாடின் துவக்கத்தை எதிர்நோக்கியுள்ளது.
இந்த இயக்கம் 2020 முழுவதிலும் பலத்த ஆதரவைப் பெற்று வந்தது. இப்போது இந்த குழு திங்களன்று தனது தலைமையை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த புதிய தொழிற்சங்கம் தங்களை ‘ஆல்பாபெட் தொழிலாளர் சங்கம்’ என்று அழைத்துக்கொள்கிறது. கூகிளில் (Google) இந்த செயல்பாட்டிற்கு 'கட்டமைப்பு மற்றும் நீட்டித்த நிலைப்பாட்டை’ அளிப்பதே இந்த தொழிற்சங்கத்தின் நோக்கமாகக் கூறப்பட்டுள்ளது. ஆல்பாபெட்டின் மனசாட்சியாக செயல்படுவதை தொழிற்சங்கம் அதன் வழிகாட்டும் கொள்கைகளில் ஒன்றாக குறிப்பிடுகிறது. இந்த பொறியாளர்கள் குழு ஆல்பாபெட்டை 'தீமை செய்யாமல் பணம் சம்பாதிக்கும் கொள்கையை’ நோக்கி முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறது.
தொழிற்சங்கத்தின் துணைத் தலைவர் செவி ஷா, "எங்கள் குறிக்கோள்கள் ‘மக்கள் போதுமான ஊதியம் பெறுகிறார்களா?’ என்பதைப் போன்ற பணியிட கேள்விகளுக்கு அப்பாற்பட்டவை. எங்கள் குறிக்கோள் மிகவும் பரந்த அளவில் உள்ளதன” என்றார். ஆல்பாபெட்டை பணியாளர் (Employees) என்ற சக்தி தங்களுக்குள் இருக்கும் ஒற்றுமையிலிருந்து பிறக்கிறது என்று யூனியன் அறிவிக்கிறது. குழு அதன் திட்டங்களாக பின்வருவனவற்றை வகுத்துள்ளது:
-எங்கள் பணி நிலைமைகள் அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் நியாயமானவையாகவும் இருக்க வேண்டும்.
-துன்புறுத்தல், துஷ்பிரயோகம் (Harassment), பாகுபாடு மற்றும் பழிவாங்கல் ஆகியவற்றின் குற்றவாளிகள் அந்த குற்றங்களுக்கு பொறுப்பேற்று பதிலளிக்க வேண்டும்.
-எங்கள் நன்மதிப்புகளுடன் ஒத்துப்போகாத பிராஜெக்டுகளில் பணிபுரிய மறுக்கும் சுதந்திரம் வேண்டும்.
-அனைத்து நிலையில் உள்ள தொழிலாளர்களுக்கும் ஒரே விதமான வசதிகள் வழங்கப்பட வேண்டும்.
ALSO READ: Jio Happy New Year Offer: மற்ற நெட்வொர்க்குகளுக்கும் இனி free, unlimited calls
கூகிளின் பணியாளர் நடவடிக்கைகளின் இயக்குநர், இதற்கு பதிலளிக்கும் வகையில், ஒரு ஆதரவான மற்றும் அனைவருக்கும் பலனளிக்கும் பணியிட சூழலுக்கான உறுதியை அளித்தார். கூகிள் ஊழியர்கள் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாத்துள்ளனர் என்று அவர் கூறினார். "ஆனால் நாங்கள் எப்போதுமே செய்ததைப் போலவே, எங்கள் அனைத்து ஊழியர்களுடனும் நேரடியாக ஈடுபடுவோம்," என்று அவர் கூறினார்.
இப்படிப்பட்ட தொழிற்சங்க உருவாக்கத்தால் தலைமையுடனான உறவுகள் பாதிக்கப்படலாம். கூகிள் நிறுவனத்திற்கு சிக்கல்களை ஏற்படுத்தும் பிரச்சனைகளைப் பற்றி இந்த தொழிற்சங்கம் முன்னிலைப்படுத்தக்கூடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ALSO READ: Tech News: 2021-ல் வருகின்றன OnePlus-ன் இரண்டு புதிய ஃபோன்கள்: முழு விவரம் உள்ளே
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR