Honda Bikes: ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (HMSI) இந்தியாவின் இரண்டாவது பெரிய இருசக்கர வாகன நிறுவனமாகும். இது ஹீரோவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய விற்பனையாளர். இந்த நிறுவனம் தீபாவளியையொட்டி சிறப்பான சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகையில், வாடிக்கையாளர்கள் ஜீரோ டவுன் பேமென்ட் மற்றும் நோ காஸ்ட் இஎம்ஐயில் ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை வாங்கலாம். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பைக் அல்லது ஸ்கூட்டரை பணம் செலுத்தாமல் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.
மேலும் படிக்க | ஓலா, ஊபருக்கு தடை - அதிக கட்டணம் வசூலிப்பதால் அதிரடி அறிவிப்பு
அக்டோபர் 31 ஆம் தேதி வரை இந்த சலுகை பொருந்தும். ஹோண்டா நிறுவனத்தின் அனைத்து மாடல்களுக்கும் இந்த சலுகை பொருந்தும். ரூ.50,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு ரூ.5000 வரை கேஷ்பேக் சலுகை உள்ளது. IDFC பேங்க் கிரெடிட் கார்டில் இருந்து EMI செய்து வாடிக்கையாளர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது தவிர, இந்த கேஷ்பேக் சலுகையானது ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி, பெடரல் வங்கி மற்றும் பாங்க் ஆஃப் பரோடா வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும்.
இருப்பினும், ஜீரோ டவுன் பேமென்ட் மற்றும் நோ காஸ்ட் இஎம்ஐ சலுகையை பொறுத்தவரை, வாகனத்தை யார் பெறுகிறார்கள், யார் பெற மாட்டார்கள் என்பது நிறுவனத்தின் வழிமுறைகளுக்கு உட்பட்டது. குறிப்பிடத்தக்க வகையில், ஹோண்டா இரு சக்கர வாகனங்கள் இந்திய சந்தையில் உறுதியாக உள்ளது. செப்டம்பர் 2022-ல், மொத்தம் 5.18 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. செப்டம்பர் 2021-ல் இந்த எண்ணிக்கை 4.88 லட்சமாக இருந்தது. ஆண்டு விற்பனையில் மொத்த வாகன விற்பனை 7.6% அதிகரித்துள்ளது. பண்டிகைக் காலத்தில் விற்பனையை மேலும் அதிகபடுத்தும் வகையில் நிறுவனம் நசலுகைகளை வழங்கியுள்ளது.
மேலும் படிக்க | நூர்துங் எலக்ட்ரிக் பைக்கின் சிறப்பம்சங்கள்! 300Wh பேட்டரி! 60 கிமீ மைலேஜ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ