Smartphone: குவாலிட்டி கேமரா மற்றும் பேட்டரி; கெத்தாக களமிறங்கும் புதிய 5G ஸ்மார்ட்போன்

Honor 70 5G Launch: சிறந்த கேமராக்கள் மற்றும் பேட்டரியுடன் கூடிய ஸ்டைலான Honor 5G ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 26, 2022, 04:15 PM IST
  • விரைவில் அறிமுகமாகும் 5ஜி ஸ்மார்ட்போன்
  • குவாலிட்டி கேமரா மற்றும் பேட்டரியை கொண்டுள்ளது
  • விலை அதிகமானாலும் வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது
Smartphone: குவாலிட்டி கேமரா மற்றும் பேட்டரி; கெத்தாக களமிறங்கும் புதிய 5G ஸ்மார்ட்போன் title=

Honor 70 5G Launch Specifications Price: ஸ்மார்ட்போன் சந்தை மிகவும் பிஸியான சந்தையாகும். அங்கு ஒவ்வொரு நாளும் புதிய ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்படுகின்றன. நீங்கள் புதிய ஃபோனைத் தேடுகிறீர்களானால், ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஹானர், ஹானர் 70 5ஜி என்ற புதிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பல அதிரடி அம்சங்களைக் கொண்டுள்ளது. அதன் விலை மிகவும் அதிகம் என்றாலும், அதன் விவரக்குறிப்புகளுடன் ஒப்பிடும்போது, அந்த விலைக்கு நியாயமாக இருப்பது போல் தெரிகிறது. 

Honor 70 5G வெளியீட்டு தேதி

ஹானர் 70 5G இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து நாடுகளிலும் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் ஒரே ஒரு சேமிப்பக வேரியண்டில் மட்டுமே சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ப்ரீ புக்கிங் ஆர்டரில் கிடைக்கிறது.

Honor 70 5G விலை

ஹானர் 70 5ஜி 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட வகைகளில் மட்டுமே அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த மாடலின் விலை UK-ல் GBP 479.99-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 45,300 ஆகும். இந்த ஸ்மார்ட்போனை கிரிஸ்டல் சில்வர், எமரால்டு கிரீன் மற்றும் மிட்நைட் பிளாக் ஆகிய மூன்று வண்ணங்களில் வாங்கலாம்.

Honor 70 5G விவரக்குறிப்புகள்

Honor 70 5G ஆனது 6.67 இன்ச் OLED டிஸ்ப்ளே, 1080 x 2400 பிக்சல்கள் முழு HD+ தீர்மானம், 20:9 என்ற விகிதமும் 120Hz புதுப்பிப்பு வீதமும் கொண்ட இரட்டை சிம் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G+ SoC செயலியில் இயங்குகிறது மற்றும் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பகத்துடன் வழங்கப்படுகிறது.

54MP Sony IMX800 முதன்மை சென்சார், 50MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 2MP டெப்த் சென்சார் ஆகியவற்றை உள்ளடக்கிய டிரிபிள் கேமரா அமைப்பை இந்த ஃபோன் கொண்டுள்ளது. Honor 70 5G-ன் முதன்மை பின்புற கேமரா 4K தெளிவுத்திறன் கொண்ட வீடியோ பதிவு மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் சப்போர்ட் (EIS) உடன் வருகிறது. இந்த ஃபோனில் 32 எம்பி முன்பக்க கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அம்பியன்ட் லைட் சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார் மற்றும் கைரேகை ஸ்கேனர் உள்ளது. இந்த ஃபோனில் 4800mAh பேட்டரி மற்றும் 66W சூப்பர்சார்ஜ் சார்ஜர் மற்றும் சார்ஜ் செய்ய USB Type-C சார்ஜிங் போர்ட் உள்ளது. 

மேலும் படிக்க | iPhone 13-ல் ரூ. 34,000 தள்ளுபடி: பிளிப்கார்ட் சேலில் அதிரடி சலுகை, முந்துங்கள்!!

மேலும் படிக்க | கடன் செயலிகளின் ஏமாற்று வேலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கூகுள் ப்ளே ஸ்டோர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News