இந்திய ஐடி ஊழியர்களுக்கு ஜப்பான் அறிய வேலை வாய்ப்பினை அளிக்க உள்ளது. ஜப்பானில் உடனடியாக 2,00,000 இந்திய ஐடி ஊழியர்கள் தேவை என்று தெரிவித்துள்ளனர்.
இதனால் இந்தியாவில் வேலை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஜப்பான் அறிய வேலை வாய்ப்பினை அளிக்க உள்ளது. ஐடி ஊழியர்கள் எண்ணிக்கை தற்போது ஜப்பானில் 9,20,000 ஐடி ஊழியர்கள் உள்ள நிலையில் உடனடியாக 2,00,000 நபர்கள் தேவைப்படுகிறது ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனை இந்தியர்களை வைத்துச் சமாளிக்க முடிவு செய்துள்ளதாகவும், 2030-ம் ஆண்டுக்குள் இது 8 லட்சமாக அதிகரிக்கும் என்றும் ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு ஒரு அரசு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் கீழ் ஜப்பான் நிறுவனங்கள் பிற நாடுகளுடன் வர்த்தகத்தினை மேற்கொள்கிறது. இந்திய - ஜப்பான் வணிகக் கூட்டணி குறித்துப் பெங்களூருவில் பேசிய மேத்தா ஜப்பான் அரசு குறிப்பாக ஐதராபாத்தினைச் சேர்ந்து நிறுவனங்களுடன் இணைந்து செயல் பட விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.
அமெரிக்கா போன்றே ஜப்பான் அரசு அதிகத் திறன் படைத்த ஊழியர்களுக்குக் கிரீன் கார்டு அளிக்க முடிவு செய்துள்ளது. மேலும் கிரீன் கார்டு பெறும் ஊழியர்கள் ஜப்பானில் நிரந்தரமாகக் குடியேறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பான் நிறுவனங்கள் அமெரிக்காவை விடச் சீனாவில் 30,000 ஜப்பான் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் 1,369 ஜப்பான் நிறுவனங்கள் உள்ளன.