பட்ஜெட் 2025: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி, பிரதமர் மோடி 3.0 அரசாங்கத்தின் இரண்டாவது முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்வார். வரவிருக்கும் 2025-26 மத்திய பட்ஜெட் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நடுத்தர வர்க்கத்தினர் குறிப்பிடத்தக்க வரிச் சலுகைகளை எதிர்பார்க்கின்றனர்.
பட்ஜெட் தொடர்பான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், வருமான வரிச் சட்டங்கள் எளிமைபடுத்தப்பட்டு, நேரடி வரிச் சட்டம் (Direct Tax Code - DTC) 2025 என்னும் புதிய விதிகளை விரைவில் மத்திய அரசு அறிமுகப்படுத்தக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. வருமான வரிச் சட்டம், 1961 விதிகளுக்கு பதிலாக DTC கொண்டு வரப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
நேரடி வரிச் சட்டம் வருமான வரிச் சட்டங்களை மாற்றியமைக்கும், அவற்றை எளிமையாக்கும் மற்றும் தனிநபர்கள், அரசாங்கம் மற்றும் தொழில்துறைக்கான சட்ட சிக்கல்களை பெருமளவு குறைக்கும். வருமான வரிச் சட்டம், 1961, தனிநபர் வருமான வரி, பெருநிறுவன வரி மற்றும் பத்திர பரிவர்த்தனை வரி போன்ற பகுதிகளை உள்ளடக்கிய 23 அத்தியாயங்களில் 298 பிரிவுகளைக் கொண்டுள்ளது. நேரடி வரிக் குறியீட்டின் புதிய பதிப்பு மிகவும் குறுகியதாகவும் தெளிவாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
DTC அமலாக்கத்திற்குப் பிறகு ஏற்படும் மாற்றங்கள்
DTC தற்போதைய வருமான வரிச் சட்டத்தில் உள்ள பிரிவுகள் மற்றும் அத்தியாயங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும், காலாவதியான விதிகளை நீக்கும் மற்றும் மொழியை எளிமைப்படுத்தும். இது வரி செலுத்துவோர் மற்றும் தொழில் வல்லுநர்கள் இருவரும் சட்டத்தை புரிந்துகொண்டு பின்பற்றுவதற்கு சட்டத்தை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் சீதாராமன், வருமான வரிச் சட்டம், 1961 விதிகளை சுருக்கமாகவும் எளிதாகவும் புரிந்துகொள்ளும் வகையில் மறுசீரமைக்க முன்மொழிந்தார்
1. எளிமையான வருமானக் கணக்கீடுகள்: வருமானத்தைக் கணக்கிடுவதற்கான சிக்கலான முறைகள் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய சூத்திரங்களால் மாற்றப்படும்.
2. ஒரே வரி ஆண்டு: "மதிப்பீட்டு ஆண்டு" மற்றும் "நிதி ஆண்டு" ஆகிய சொற்கள் தெளிவுக்காக ஒரே "வரி ஆண்டு" ஆக இணைக்கப்படும்.
3. குறைவான படிவங்கள்: வரி வருமானத்தை தாக்கல் செய்வதற்குத் தேவையான கூடுதல் படிவங்களின் எண்ணிக்கை குறைக்கப்படும். மேலும் அனைத்து படிவங்களும் ஆன்லைனில் அணுகக்கூடியதாக இருக்கும்.
4. தெளிவான பிரதிநிதித்துவம்: வரி செலுத்துவோர் எளிதாகப் புரிந்துகொள்ள அட்டவணைகளைப் பயன்படுத்தி சூழ்நிலைகள் விளக்கப்படும்.
மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆகும், அடிப்படை சம்பளம் அதிரடியாய் உயரும்
நிபுணர்கள் கருத்து
"புதிய நேரடி வரிக் குறியீட்டை அறிமுகப்படுத்துவதன் மூலம் வருமான வரி கட்டமைப்பின் விரிவான மாற்றம் குறித்த அறிவிப்பை அரசாங்கம் வெளியிடக்கூடும்" என்று CA சுரேஷ் சுரானா இது குறித்து கூறுகையில், "இந்த முன்மொழியப்பட்ட அமைப்பு வரி கட்டமைப்பை எளிமைப்படுத்தவும், இணக்கத்தை ஊக்குவிக்கவும், இந்தியாவின் வரிக் கொள்கைகளை உலகளாவிய தரநிலைகளுடன் இணைக்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளது" என்றார்.
நேரடி வரிச் சட்டம் போன்ற குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களை அவசரமாக அறிமுகப்படுத்தப்படக் கூடாது என்றும் நிபுணர்கள் எச்சரித்தனர். சட்ட வரைவை வெளியிடுவது மற்றும் பொது ஆலோசனைகளை நடத்துவது உள்ளிட்ட சரியான செயல்முறையைப் பின்பற்றுவது அவசியம் அவர்கள் பரிந்துரைக்கின்றனர். மாற்றங்கள் வரவிருக்கும் பட்ஜெட் மூலம் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
மேலும் படிக்க | SIP Mutual Fund: 20 ஆண்டு பரஸ்பர நிதிய தொடர் முதலீட்டில் கையில் ₹6 கோடி இருக்கும்...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ