Ayodhya News In Tamil: ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராமர் பக்தர்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ அற்புதமான பரிசை வழங்கியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் பல சிறப்பு சேவைகளை தொடங்குவதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக அயோத்திக்கு வரும் பக்தர்களுக்கு இணைப்பு விஷயத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது. இந்தியாவில் உள்ள மக்கள் அடிக்கடி மொபைல் நெட்வொர்க் தொடர்பான பிரச்சனைகளை எதிர் கொள்கின்றனர். ஆனால் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனத்தின் அறிவிப்பால், அயோத்தியில் மொபைல் நெட்வொர்க் சிக்கல் இருக்காது எனக் கூறப்படுகிறது. அதாவது அயோத்தி நகருக்கு வரும் ராமர் பக்தர்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனம் சிறப்பான அறிவிப்பை அறிவித்துள்ளது. அதுக்குறித்து பார்ப்போம்.
அயோத்தியில் பக்தர்களுக்கு ஜியோ நிறுவனம் அளித்த பரிசு
அயோத்தியில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவை வீட்டில் நேரலையில் காட்டப்படும். இது தவிர மேலும் பல சேவைகள் தொடங்கப்பட்டு வருகின்றன.
அயோத்தியில் பக்தர்களுக்கு எந்தவிதமான பிரச்சனையும் ஏற்படாத வகையில் அதிவேக இணைய இணைப்பை வழங்குவதாக ஜியோ அறிவித்துள்ளது.
அயோத்தியில் ஜியோ ட்ரூ 5ஜி மற்றும் ஸ்டாண்டலோன் 5ஜி நெட்வொர்க் மேம்படுத்தப்படும்.
இது தவிர, ஜியோ அயோத்தியில் கூடுதல் டவர்களை நிறுவும். இதனால் நகரம் முழுவதும் சிறந்த அழைப்பு மற்றும் டேட்டா சேவையை வழங்க முடியும்.
அயோத்தியில் அழைப்பிலோ, டேட்டாவை அணுகுவதிலோ ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், அதைத் தவிர்க்க ஃபாஸ்ட்ராக் புகார் வசதி தொடங்கப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க - அயோத்தி ஸ்ரீராமரை தரிசிக்க... நேரம் & முன்பதிவு விபரங்கள்!
அயோத்தியில் உள்ள யாத்ரீகர்களுக்கு தண்ணீர் -ஜியோ
அயோத்தி செல்லும் பக்தர்கள் தங்கள் சாதனங்களை சார்ஜ் செய்ய சார்ஜிங் நிலையங்களை ஜியோ அமைக்கும். இது தவிர பல இடங்களில் 'மே ஐ ஹெல்ப் யூ' டெஸ்க் தொடங்கப்படும். இது தவிர குடிநீர் மற்றும் குளிர்பான சேவையும் தொடங்கப்படும். ரிலையன்ஸ் ரீடெய்ல் ஸ்டோர்ஸ் உதவியுடன் அயோத்தியில் உள்ள யாத்ரீகர்களுக்கு தண்ணீர் வழங்கப்படும். பிரதிஸ்தா விழா தூர்தர்ஷன் உதவியுடன் ஜியோ டிவி, ஜியோ டிவி பிளஸ் மற்றும் ஜியோ நியூஸ் ஆகியவற்றில் நேரலையாக காண்பிக்கப்படும் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
அயோத்தியில் பக்தர்களுக்கு ஏர்டெல் நிறுவனம் அளிக்கும் சேவை
அதேபோல தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், ராம் மந்திர் பிரான் பிரதிஷ்தா கொண்டாட்டங்களை முன்னிட்டு அயோத்தியின் முக்கிய வரலாற்றுப் பகுதிகள் மற்றும் நகரின் பிற முக்கிய இடங்களில் நெட்வொர்க் இணைப்பை அதிகரித்துள்ளது. ஏர்டெல் மூத்த அதிகாரி கூறுகையில், அயோத்தியில் உள்ள விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம், முக்கிய வரலாற்றுப் பகுதிகள், ஹோட்டல்கள் மற்றும் நகரின் அனைத்து முக்கிய இடங்களுக்கும் நிறுவனம் தனது நெட்வொர்க்கை விரிவுபடுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
ஏர்டெல் நிறுவனம் கூடுதல் நெட்வொர்க் தளங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அயோத்தி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ராமர் கோயிலுக்காக சில கூடுதல் தளங்கள் மற்றும் பிடிஸ் (BTS) நிறுவப்பட்டுள்ளன. இந்நிறுவனம் நகரத்தில் உள்ள அதிவேக இணையப் பகுதிகளுக்கும் ஃபைபர் அமைத்துள்ளது. இதனால், பார்வையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு எவ்வித பிரச்னையும் ஏற்படாது.
மேலும் படிக்க - அயோத்தி வந்தார் குழந்தை ஸ்ரீராமர்... 1528 முதல் 2024 வரை... கடந்து வந்த பாதை..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ