Tamil Nadu Latest News Updates: கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் தொடங்கி, இந்தாண்டு நடந்து முடிந்த மக்களவை தேர்தல் வரை அதிமுக (AIADMK) கடுமையான சரிவை சந்தித்திருக்கிறது. முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவில் முதல்வர் பதிவுக்கு நடந்த மோதல்களும், குழப்பங்களும் அனைவரும் அறிவர். இந்நிலையில், ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் கட்சியை இழுக்க, மறுபக்கம் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மை தொண்டர்களின் ஆதரவுடன் பொதுச்செயலாளராக பொறுப்பேற்று கட்சியை வழிநடுத்தி வருகிறார்.
இருப்பினும், இழந்த செல்வாக்கை மீட்க எடப்பாடி பழனிசாமி (Edappadi Palanisamy) தலைமையிலான அதிமுக பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அதிமுகவின் கிளை, வார்டு, வட்டக் கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள், செயல்பாடுகள் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்து, கட்சிப் பணிகளை மேம்படுத்துவது தொடர்பாக தொண்டர்களிடம் கருத்துகள் பெறு தலைமை முடிவெடுத்தது. அந்த வகையில், இதற்கென கள ஆய்வுக் குழுவை எடப்பாடி பழனிசாமி அண்மையில் அறிவித்தார்.
கள ஆய்வு குழுவின் கூட்டம்
அந்த வகையில், திருச்சியில் சோமரசன்பேட்டையில் இன்று அந்த கள ஆய்வு குழுவின் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் (Dindigul Srinivasan) உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,"எடப்பாடியார் இந்த கூட்டத்திற்கு வரும்போதே பேட்டி கொடுத்து கூட்டணியை கெடுத்துவிடாதீர்கள் என்று எங்களிடம் அறிவுறுத்தினார். 'நீங்கள் பேட்டியில் யாரையாவது திட்டிவிடுவீர்கள், அவர்கள் கோபித்துக் கொள்வார்கள். அதனால் பார்த்து பேசுங்கனு அவர் கையெடுத்து கும்பிட்டார்.
மேலும் படிக்க | விஜய் மாநாட்டிற்கு எப்படி இவ்வளவு கூட்டம் வந்தது? விசாரிக்கும் உளவுத்துறை!
'கூட்டணிக்கு ரூ.100 கோடி கேட்கிறார்கள்...'
அதனால் நாங்கள் ஊடகங்களிடம் பேசுவதில்லை. இப்போது வரும்போது கூட மைக்கை நீட்டினார்கள். நான் வணக்கம் அய்யா, வணக்கம் அய்யா என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். அவர்களுக்கு தேவை ஏதாவது பரபரப்பாக செய்தி சொல்ல வேண்டும். அதிமுகவிற்கு கூட்டணிக்கு (AIADMK Alliance) வருகிறவர்கள் எல்லாரும் ஒரு 20 சீட்டும், 50 முதல் 100 கோடி கொடுங்க என்று கேட்கிறார்கள். ஏதோ எள்ளு, அரிசி கேட்பதை போல் கேட்கிறார்கள்.
'நமக்குதான் மார்க்கெட்...'
அதற்கு நாம் எங்க போவது... ஸ்டாலின் கொள்ளையடித்து வைத்திருக்கிறார். கேட்ட உடனே பெட்டியை தூக்கி கொடுத்துவிடுகிறார். அங்க போய் வாங்கிக்கங்கனு சொன்னால், அங்கு போனா ஜெயிக்க முடியாது. இப்போது மார்க்கெட் உங்களுக்குதான் ஓடிகிட்டு இருக்குனு சொல்கிறார்கள். தேர்தலில் நிற்பது எவ்வளவு கஷ்டம்னு இங்குள்ள எல்லாருக்கும் தெரியும். ஆனா,வேட்பாளர் எவ்வளவு வச்சுருக்காரு. எவ்வளவு நீங்க கொடுத்தீங்க என்று தான் கேட்கிறார்களே தவிர என்னயா பண்றீங்கனு கேட்டா பதில் சொல்ல மாட்டேங்குறாங்க.
அதனால்தான் கள ஆய்வு செய்வதற்காக எங்களை நியமித்துள்ளார்கள். இங்கு அமைச்சர்கள் எல்லாரும் இருக்காங்க, மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள். உங்களிடம் நாங்கள் கணக்கு கேட்டா நீங்கள் எங்களிடம் கணக்கு கேட்பீர்கள். ஒரு பூத்துக்கு 100 ஓட்டுக்கு ஒருவர் வாக்காளர்களை கவனியுங்கள்" என கலகலப்பாகவும் விறுப்பாகவும் பேசியுள்ளார்.
முன்னதாக, அதிமுக வரும் சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைத்துக்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அதனை முற்றிலும் மறுத்து நேற்று அறிக்கை வெளியிட்டார். முன்னதாக நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்கினாலும் அவர்கள் எம்ஜிஆர் ஆக மாறிவிட முடியாது என பல அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேசியவையும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ