Top 5 Smartphones: 25 ஆயிரம் ரூபாய் விலைக்குள் இருக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள்

Best Smartphones Under Rs 25,000: 25 ஆயிரம் ரூபாய் விலைக்குள் நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களையும் கொண்ட சிறந்த ஐந்து பிராண்டு மொபைல்கள் பற்றிய விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 13, 2023, 04:37 PM IST
  • மார்க்கெட்டில் இருக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள்
  • 25 ஆயிரத்துக்கும் குறைவான விலையில்
  • கேமரா, பேட்டரி அம்சங்கள் கொண்ட மொபைல்கள்
Top 5 Smartphones: 25 ஆயிரம் ரூபாய் விலைக்குள் இருக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள் title=

1. Samsung Galaxy M34 5G

Samsung Galaxy M34 5G ஆனது 25,000 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த மொபைல். FHD+ தெளிவுத்திறனுடன் கூடிய 6.5-இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே கொண்ட இந்த மொபைல் 6000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இந்த சாம்சங் மொபைல் 5 வருட பாதுகாப்பு அப்டேட்டுகளை கொண்டிருக்கிறது. 12ஜிபி ரேம் மற்றும் Exynos 1280 செயலியுடன் இயக்கப்படுகிறது. ஹேங்கிங் பிரச்சனை இருக்காது.

2. OnePlus Nord CE 2 Lite 5G

OnePlus Nord CE 2 Lite 5G, 25,000 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த மற்றொரு ஸ்மார்ட்போன். 6.59-இன்ச் டிஸ்ப்ளே 120Hz புதுப்பிப்பு வீதத்துடன்  இருக்கும் இந்த மொபைலின் பிரதான கேமரா 64MP ஆகும். நல்ல கேமரா மொபைல் தேடுபவர்கள் இதனை வாங்கலாம். கிளியரான புகைப்படங்களை எடுத்து உங்களை வியக்க வைக்கும். கேமிங் விளையாடுபவர்கள், வீடியோ அழைப்புகளுக்கும் சிறந்தது. 5000mAh பேட்டரி குறைவான நேரத்தில் சார்ஜ் ஆகும். 

மேலும் படிக்க |  Amazon பார்சலில் சோனி ஹெட்போனுக்கு பதிலாக வந்த டூத்பேஸ்ட்..! 20 ஆயிரம் காலி

3. OnePlus Nord CE 3 5G

25 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் இருக்கும் மற்றொரு மொபைல் OnePlus Nord CE 3 5G. இது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய பெரிய 6.7-இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. புகைப்படங்களுக்கு பெயர்போன Sony IMX890 உடன் 50MP பிரதான சென்சார் கேமரா அமைப்பு இதில் இருக்கிறது. 8 MP அல்ட்ராவைடு மற்றும் 2MP மேக்ரோ லென்ஸ்கள் இருப்பதால் புகைப்படங்களில் புகுந்து விளையாடலாம். 5000 mAh பேட்டரி கொண்ட இந்த மொபைல் கேமிங், மல்டி டாஸ்கிங்கிற்கு ஏற்றது.

4. நோக்கியா ஜி42 5ஜி

Nokia G42 5G மொபைல் 6ஜிபி ரேம், 5ஜிபி மெய்நிகர் ரேம் மூலம் அதிகரிக்கப்பட்டது. இதன் செயற்கை நுண்ணறிவு அம்சத்துடன் கூடிய 50எம்பி டிரிபிள் ஏஐ கேமரா உயர்தர படத்தைப் பிடிக்கிறது. பல்வேறு புகைப்படத் தேவைகளுக்கு ஏற்றது. பெரிய 5000mAh பேட்டரி நாள் முழுவதும் பயன்படுத்த போதுமான சக்தியை வழங்குகிறது. பாதுகாப்பான மற்றும் புதுப்பித்த அனுபவத்தை உறுதி செய்கிறது. 25 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்ஃபோன்.

5. Redmi Note 12 5G

Redmi Note 12 5G, 25 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்கும் தரமான போன்களுக்கு போட்டியை கொடுக்கக்கூடியது. இது 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.67-இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. 48MP AI டிரிபிள் கேமரா அமைப்பு பல்வேறு காட்சிகளுக்கு ஏற்ற தரமான புகைப்படத்தை வழங்குகிறது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி நீண்ட கால ஆற்றல் மற்றும் வசதியை வழங்குகிறது. 

மேலும் படிக்க | ஏர்டெல்லுக்கு செம ஷாக் கொடுத்த ஜியோ..! 25 மாநிலங்களில் கடையை விரித்தது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News