சைபர் தாக்குதலை தவிர்க்க உடனே இதை செய்யுங்கள்: வல்லுநர்கள் எச்சரிக்கை!!

Whatsapp Alert: வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் அமைப்புகளில் மாற்றங்களைச் செய்யுமாறு சைபர் பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 4, 2022, 03:24 PM IST
  • வாட்ஸ்அப் பயனர்களுக்கு ஒரு முக்கிய தகவல்.
  • வாட்ஸ்அப்பில் டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன் செட்டிங்ஸை ஆக்டிவேட் செய்வது எப்படி?
  • உங்கள் வாட்ஸ்அப்பிற்கு கூடுதல் பாதுகாப்பு.
சைபர் தாக்குதலை தவிர்க்க உடனே இதை செய்யுங்கள்: வல்லுநர்கள் எச்சரிக்கை!!  title=

வாட்ஸ்அப் பயனர்களுக்கு ஒரு முக்கிய தகவல். பயனர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!! வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் அமைப்புகளில் மாற்றங்களைச் செய்யுமாறு சைபர் பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். வாட்ஸ்அப் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது. வாட்ஸ்அப்பில் பல பயனர்கள் ஆக்டிவ்வாக உள்ளதால், மோசடிக்காரர்களும் இதில் இன்றைய காலத்தில் ஆக்டிவ்வாக உள்ளனர். வாட்ஸ்அப் ஹேக்கர்களை காந்தம் போல் ஈர்க்கிறது! 

வாட்ஸ்அப்பை பல பயனர்கள் பயன்படுத்துவதால், மோசடிக்காரர்களால் ஒரே நேரத்தில் பலரை குறிவைக்க இது ஒரு வாய்ப்பாக உள்ளது. பல்வேறு பாதுகாப்பு சோதனைகள் உள்ளபோதிலும், ஹேக்கர்கள் மற்றும் ஸ்கேமர்கள் எப்போதும் சந்தேகத்திற்கு இடமில்லாத பயனர்களைத் தாக்குவதற்கான வழியைக் கண்டுபிடிக்கின்றனர். இந்த ஹேக்கர்களால் பாதிக்கப்படும் பயனர்கள் பெரும் இழப்பை சந்திக்கின்றனர். 

ஆகையால், பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் கணக்கில் ஒரு தவறு செய்தால், அது ஆன்லைன் மோசடி செய்பவர்களுக்கு மிக எளிதாகிவிடும். ஏமாற்றுவதற்கு வாய்ப்பை தேடிக்கொண்டு இருக்கும் மோசடிக்காரர்களுக்கு பயனர்கள் செய்யும் சிறு தவறுகளும் உதவியாகிவிடும். 

ஆகையால், இணைய பாதுகாப்பு வல்லுநர்கள் வாட்ஸ்அப் பயனர்கள் செயலியில் வழங்கப்பட்டுள்ள சிறந்த பாதுகாப்பு அமைப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதை உறுதிசெய்யுமாறு எச்சரித்துள்ளனர். அவ்வாறு செய்யத் தவறினால் பயனர்கள் மோசடிக்காரர்களால்  இலக்காக்கப்படுவார்கள். இதற்கான பல கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தேவையில்லை என்றும், இதற்கான தீர்வு வாட்ஸ்அப்பிலேயே உள்ளது என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள். 

மேலும் படிக்க | Realme 10: புதுசா போன் வாங்க போறவங்க பக்காவாக வெளியாகும் Realme 10 சீரிஸூக்கு காத்திருக்கலாம் 

உங்கள் முக்கிய செட்டிங்க்ஸில் ஒரு செட்டிங் ஆக்டிவ்வாக உள்ளதை நீங்கள் கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும். அது டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன் ஆகும். இதன் மூலம், ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அல்லது சைபர் தாக்குதல்களுக்கு பலியாகும் வாய்ப்புகள் பன்மடங்கு குறைக்கப்படுகின்றன. இதை எப்படி செய்வது என்று இங்கே காணலாம். 

வாட்ஸ்அப்பில் டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன் செட்டிங்ஸை ஆக்டிவேட் செய்வது எப்படி?

- ஸ்டெப் 1: முதலில் WhatsApp Settings -ஐத் திறக்கவும்.
- ஸ்டெப் 2: பின்னர் அகவுண்ட்டில் டேப் செய்து, டூ ஸ்டெப் வெரிஃபிகேஷன் ஆப்ஷனில் செல்லவும். 
- ஸ்டெப் 3: இப்போது அதை எனேபிள் செய்து, உங்களுக்கு விருப்பமான ஆறு இலக்க PIN ஐ உள்ளிட்டு அதை உறுதிப்படுத்தவும்.
- ஸ்டெப் 4: மின்னஞ்சல் முகவரியைச் சேர்க்க விரும்பவில்லை என்றால், நீங்கள் அணுகக்கூடிய மின்னஞ்சல் முகவரியை வழங்க வேண்டும். அல்லது தவிர் என்பதை டேப் செய்ய வேண்டும். அதன் பின்னர் நெக்ஸ்ட் என்பதை டேப் செய்ய வேண்டும். 
- ஸ்டெப் 5: இறுதியாக, மின்னஞ்சல் முகவரியை உறுதிசெய்து சேமி அல்லது முடிந்தது என்பதைத் டேப் செய்யவும். 
- ஸ்டெப் 6: இது ஹேக்கர்கள் உங்கள் கணக்கை அணுகுவதை தடுக்கும் காவலராக (கார்ட் போல) செயல்படும்.

இதைத் தவிர மேலும் சில முக்கியமான பாதுகாப்பு அமைப்புகளும் உள்ளன. இவை உங்கள் வாட்ஸ்அப் கணக்கில் கூடுதல் பாதுகாப்பை சேர்க்கின்றன.

உங்கள் வாட்ஸ்அப்பிற்கு கூடுதல் பாதுகாப்பு

- டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன் செயல்முறையைத் தவிர, சைபர்-பாதுகாப்பு நிபுணர்கள் ஸ்க்ரீன் லாக்கை கான்ஃபிகர் செய்யவும் பரிந்துரைக்கின்றனர்.

- நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனை அடிக்கடி புதுப்பித்தால், உங்கள் செட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் புதிய போன் அல்லது சாதனத்தில் நீங்கள் WhatsApp ஐ நிறுவினால், உங்கள் தனியுரிமை அல்லது பாதுகாப்பு அமைப்புகள் ரீசெட் செய்யப்படும். ஆகையால், நீங்கள் ஸ்க்ரீன் லாக் அம்சத்தை சேர்ப்பது அல்லது வேறு மாற்றங்களையும் மீண்டும் செய்ய வேண்டியிருக்கும்.

- மேலும், பக் மற்றும் மால்வேரை சரிசெய்ய சமீபத்திய மென்பொருள் இணைப்புகளுடன் உங்கள் சாதனம் மற்றும் செயலிகள் புதுப்பிக்கப்படுவதை உறுதிசெய்யவும்.

மேலும் படிக்க | ஜியோ 5ஜி நெட்வொர்கை 5ஜி மொபைலில் யூஸ் பண்ண முடியாது 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News