சமீபத்தில் சியோமி நிறுவனம் புது பிஷாக்ஷிப் ஸ்மார்ட்போனின் விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி புது ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 895 பிராசஸர் மற்றும் 200 எம்பி பிரைமரி கேமரா கொண்டிருக்கும். ஸ்மார்ட்போனில் 200 மெகாபிக்சல் கேமரா சென்சாரைப் பார்ப்பது இதுவே முதல் முறையாகும். இந்த சென்சார் சாம்சங் தயாரிப்பதாக கூறப்படுகிறது, மேலும் நிறுவனம் அதற்கான பணிகளையும் தொடங்கியுள்ளது.
புது ஸ்மார்ட்போன் (Smartphone) குவால்காம் ஸ்னாப்டிராகன் 895 பிராசஸர் மற்றும் 200 எம்பி பிரைமரி (Xiaomi) கேமரா கொண்டிருக்கும். 200 எம்பி கேமரா சென்சார் முதன் முதலில் சாம்சங் ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. எனினும், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங்கின் அடுத்த தலைமுறை பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் 200 எம்பி சென்சார் வழங்கப்படாது என கூறப்படுகிறது.
ALSO READ | மிகவும் கம்மி விலைக்கு 14-inch Laptop வாங்க செம்ம வாய்ப்பு!
இதற்கான காரணம் வெளியாகவில்லை. எனினும், கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடலில் அதிக மெகாபிக்சல் கேமராவை வழங்குவதோடு, பெரிய பிக்சல் அளவை வழங்க சாம்சங் முடிவு செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே 200 எம்பி கேமராவுடன் வெளியாகும் முதல் ஸ்மார்ட்போனினை சியோமி வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR