ஐதராபாத்தில் புரோ கபடி லீக் 5வது சீசன் இன்று துவங்குகிறது. தொடரின் முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ், தமிழ் தலைவாஸ் அணிகள் மோதுகின்றன.
தொடக்க விழாவந்து ஐதராபாத் நகரில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் அக்ஷய் குமார், சிரஞ்சீவி, ராம்சரண், ராணா டகுபதி, அல்லு அர்ஜுன், தமிழ் தலைவாஸ் அணி உரிமையாளர் சச்சின் டெண்டுல்கர், என்.பிரஸாத், அல்லு அரவிந்த், மகளிர் கிரிகெட் அணி தலைவர் மித்தாலி ராஜ், பாட்மின்டன் வீரர்கள் சாய் ப்ரணீத், கிடாம்பி ஸ்ரீகாந்த், குரு சாய்தத், பயிற்சியாளர் கோபிசந்த், ராமுராவ் மற்றும் சாமுண்டீஸ்வரி ஆகிய பல பிரபலங்கள் பங்கற்கவுள்ளனர்.
சென்னையில் இன்று தமிழ் தலைவாஸ் அணியின் ஜெர்சியை கமல்ஹாசன் அறிமுகப்படுத்தினார்.
கடந்த 2014-ம் ஆண்டு துவங்கப்பட்ட புரோ கபடி லீக்கின் 5-ஆவது சீசனில் முதல் முறையாக கூடுதலாக நான்கு அணிகள் பங்கேற்கின்றன. ஏ, பி, என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, மொத்தம் 12 அணிகள் இந்த சீசனில் விளையாடுகின்றன. மொத்தம் 138 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. தமிழகத்தை சேர்ந்த தமிழ் தலைவாஸ் அணி பி பிரிவில் இடம் பெற்றுள்ளது. தமிழ் தலைவாஸ் அணியின் உரிமையாளராக சச்சின் டெண்டுல்கர் உள்ளார்.
புரோ கபடி லீக்கில் சச்சின் டெண்டுல்கர் உரிமையாளராக உள்ள தமிழ் தலைவாஸின் விளம்பர தூதராக நடிகர் கமல்ஹாசன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு துவங்கப்பட்ட புரோ கபடி லீக்கின் 5-ஆவது சீசனில் முதல் முறையாக கூடுதலாக நான்கு அணிகள் பங்கேற்கின்றன. ஏ, பி, என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, மொத்தம் 12 அணிகள் இந்த சீசனில் விளையாடுகின்றன. மொத்தம் 138 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. தமிழகத்தை சேர்ந்த தமிழ் தலைவாஸ் அணி பி பிரிவில் இடம் பெற்றுள்ளது. தமிழ் தலைவாஸ் அணியின் உரிமையாளராக சச்சின் டெண்டுல்கர் உள்ளார்.
சமீபத்தில் குஜராத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கபடி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் அனுப் குமார் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. கோப்பை வென்ற இந்திய வீரர்களுக்கு டெல்லியில் உள்ள மத்திய விளையாட்டுத்துறை மந்திரி விஜய் கோயல் தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் ஒலிம்பிக்கில் கபடி விளையாட்டை சேர்ப்பதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.