திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் கமல் ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அரசியலையும் தாண்டி பல்வேறு துறைகளில் ஆர்வமுடையவர் கருணாநிதி. மூத்த அரசியல்வாதியாக மட்டுமில்லாமல், அற்புதமான கதாசிரியராக திகழ்பவர். சினிமாவில் கருணாநிதியின் வசனங்களை பேசிவிட்டால் ஒரு நடிகர் முழு தகுதி பெற்றவராகிறார். அவரின் வசனம் என்பது திரைத்துறையில் நுழைய அனுமதி சீட்டு போன்றது.
கருணாநிதியை நான் தமிழ் ஆசான் என்று கூறியதற்கு எம்ஜிஆரும் போனில் அழைத்து பாராட்டினார். அதே போல தசாவதாரம் படத்தின் போது எனது கன்னத்தை கிள்ளி பாராட்டு வழங்கியவர் கலைஞர் கருணாநிதி.
விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்க உள்ளார்.
இன்று விஜய் டிவியின் ‘பிக் பாஸ்’ தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல் ஹாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அரசியல் சம்பாதிக்கும் தொழில் அல்ல. அரசியல்வாதிகள் சேவை மனப்பான்மையுடன் இல்லை என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பது இல்லை. தற்போதைய அரசியலைப் பார்த்தால் யாருமே அரசியலுக்கு வரக் கூடாது.
மகாபாரதத்தை இழிவுபடுத்தி பேசியதாக நடிகர் கமல் ஹாசன் மீது வழக்கு பதியக் கோரி வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆதிநாதசுந்தரம் மனு தாக்கல்
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பேட்டியளித்த நடிகர் கமல்ஹாசன், மகாபாரதத்தை இழிவுபடுத்தி பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து நடிகர் கமல் ஹாசன் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆதிநாதசுந்தரம் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெறும் என தெரிகிறது.
நடிகர் கமல் ஹாசனின் அண்ணன் சந்திராஹாசன் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
பரமக்குடியில் பிரபல கிரிமினல் வழக்கறிஞராக திகழ்ந்த டி. சீனிவாசன் மகனாக 1936-ம் ஆண்டு பிறந்த சந்திர ஹாசனும் வழக்கறிஞர் பட்டம் பெற்றவராவார்.
நடிகர் கமலின் அண்ணனும், ராஜ்கமல் இண்டர்நேஷ்னல் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகியுமான சந்திரஹாசன் சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டுவந்தார். அவர் லண்டனில் உள்ள தனது மகள் அனுஹாசன் வீட்டில் வசிந்துவந்தார். 82 வயதான சந்திரஹாசனுக்கு நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
சந்திராஹாசனின் மறைவுக்கு திரையுலகப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசியலில் நிலவும் நிலையற்ற தன்மை குறித்து நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் கருத்துக்களை தெரிவித்துள்ளார். பல பிரபலங்கள் தங்களது கருத்துக்களை டுவிட்டரில் தெரிவித்து வருகின்றனர்.
அவர் கூறியதாவது:-
We've wasted our freedom years gambling our fanchise on wrong& corrupt politicians. Let's stop blaming them Lets become incorruptable.
நடிகை திரிஷா பீட்டாவின் விளம்பர தூதராக உள்ளார். ஜல்லிக்கட்டு தடைக்கு பீட்டா தான் காரணம் என்பதால் நடிகை திரிஷாவை சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.