சென்னை போயஸ் கார்டனில் உள்ள, மறைந்த முதல்-அமைச்சர் இல்லத்தில் வருமான வரித்துறையினர் நேற்று திடீரென சோதனை நடத்தினர். இந்த சோதனையானது வருமான வரித்துறை கூடுதல் இயக்குனர் தலைமையில் 10-க்கு மேற்பட்ட அதிகாரிகளுடன், 4 மணிநேரத்திற்கும் மேலாக நடைப்பெற்றது. நள்ளிரவு இந்த சோதனை முடிவுக்கு வந்தது.
வண்டலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவினை குறித்த ஓ.பி.எஸ் ட்விட்க்கு முதல்வர் இ.பி.எஸ் ரீ-ட்விட் செய்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோவினை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மறு பதிவிட்டுள்ளார்.
நிகழ்ச்சி தொடர்பான ட்வீட்கள்:-
அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ததை அடுத்து இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் இன்று டெல்லி பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்த பயணத்தில் சசிகலா மற்றும் தினகரன் நீக்கம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தை சந்தித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
முன்னதாக இன்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் பங்கேற்றனர்.
அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ததை அடுத்து நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னிர்செல்வம் நாளை டெல்லி பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்த பயணத்தில் சசிகலா மற்றும் தினகரன் நீக்கம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தை
சந்தித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
முன்னதாக இன்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் பங்கேற்றனர்.
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் நிர்வாகிகள் கூட்டத்தில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அவை:-
#AIADMK resolutions. pic.twitter.com/W6AeipmgN4
அதிமுக அமைச்சர் தங்கமணி நாமக்கல் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கி உள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
இரண்டாக பிறிந்து இருந்த அதிமுக அணிகள் ஒன்றாக இணைந்த பிறகு தனக்கு எதிரானவர்கள் பலரையும் கட்சியில் இருந்து நீக்குவதாக தினகரன் தினமும் அறிக்கை வெளியிட்டு வருகிறார்.
தனக்கு எதிரான எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்களின் கட்சி பதவியை பறிப்பதாக அறிவித்து வந்த தினகரன் நேற்று முதல்வரையே கட்சி பதவியிலிருந்து நீக்குவதாக தினகரன் அறிவித்தார்.
சட்டசபை உரிமைக்குழு எங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று டிடிவி தினகரன் அணி கூறியுள்ளது.
இரண்டாக பிறிந்து இருந்த அதிமுக அணிகள் ஒன்றாக இணைந்த பிறகு கட்சியில் பல்வேறு புதிய சர்சைகள் கிளம்பியது.
இதையடுத்து, அதிமுக-வை வழிநடத்த 15 பேர் கொண்ட குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டார். இணை ஒருங்கிணைப்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
* சசிகலா, டிடிவி தினகரன் செய்யப்பட்ட நிர்வாகிகள் நியமனம் செல்லாது.
* அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுவை விரைவில் கூட்ட முடிவு.
* சசிகலா, தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க முடிவெடுத்து தீர்மானம்.
இரண்டாக பிறிந்து இருந்த அதிமுக அணிகள் ஒன்றாக இணைந்த பிறகு கட்சி பொறுப்பிலிருந்து தனக்கு எதிராக இருக்கும் பலரை நீக்குவதாக டிடிவி தினகரன் அறிவித்து வந்தார்.
அவர்களுக்கு பதிலாக தனது ஆதரவாளர்களை கட்சி பொறுப்பில் நியமிப்பதாகவும் அறிவித்தார். தினகரன் கட்சியிலேயே இல்லாத போது அவரின் நீக்கமும், புதிய உறுப்பினர்கள் நியமனமும் செல்லாது என அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பலரும் பதிலளித்து வருகின்றனர்.
டிடிவி தினகரன் ஆதரவாளா்களான 19 சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள "தி வைண்ட் ஃப்ளவர்" ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்து இருந்தது.
புதுச்சேரி அரியாங்குப்பம் அருகில் உள்ள சின்ன வீராம் பட்டினம் கடலோர கிராமத்தில் உள்ள "தி வைண்ட் ஃபளவர்" ரெசார்ட்டில் தற்போது அவர்களை தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது இன்று புதுச்சேரி சின்னவீராம்பட்டினத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கியிருக்கும் ரெசார்ட்டில் காவல் அதிகாரிகள் குவிந்தது உள்ளனர்.
டிடிவி தினகரன் ஆதரவாளா்களான 19 சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள "தி வைண்ட் ஃபளவர்" ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரும்பாண்மை நிரூபிக்க சசிகலாவுக்கு ஆதராவாக இருப்பதாக கூறியிருந்த சட்டமன்ற உறுப்பினா்களை கூவத்தூர் விடுதியில் தங்க வைத்திருந்தார்.
இப்போது மீண்டும் அதே நிலை திரும்பியுள்ள நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் தமிழக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டதால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பாண்மையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வெளிநாட்டு நிதி மோசடி தொடர்பாக, டிடிவி தினகரன் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு சென்னை எழும்பூர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் டிடிவி தினகரன் இன்று ஆஜரானார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சிக்கும், கட்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார்.
குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த டிடிவி தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு நாளை விசாரணை.
முறைகேடாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாக கடந்த 1996-ம் ஆண்டு டிடிவி தினகரன் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கை அமலாக்கத் துறை தொடர்ந்தது. இந்த வழக்கை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் நடைபெற்று வந்தது.
குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த டிடிவி தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கை விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
முறைகேடாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாக கடந்த 1996-ம் ஆண்டு டிடிவி தினகரன் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கை அமலாக்கத் துறை தொடர்ந்தது. இந்த வழக்கை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் நடைபெற்று வந்தது.
அந்நிய செலவாணி மோசடி வழக்கில் டி.டி.வி. தினகரன் மீது இன்று எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
1996-ம் ஆண்டு ரூ.45.31 கோடி அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக மத்திய அமலாக்கத்துறை தினகரன் மீது 2 வழக்குகளை பதிவு செய்தது. 20 வருடங்களாக நடந்த இந்த வழக்கில் கடந்த 2015-ம் ஆண்டில் தினகரனை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் விடுவித்தது. இதை எதிர்த்து சென்னை ஐ கோர்டில் அமலாக்கப்பிரிவு மேல்முறையீடு செய்தது.
டி.டி.வி. தினகரன் சசிகலாவை சந்திப்பதற்காக இன்று சென்னையிலிருந்து பெங்களூரு புறப்பட்டார்.
தினகரனுடன், வெற்றிவேல், இன்பதுரை, பார்த்தீபன், தங்க தமிழ்செல்வன், ஜக்கையன், கதிர்காமு உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களும் சசிகலாவை சந்திக்க உள்ளனர்.
இந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் நிலவரம் அதிமுக அம்மா அணி நிர்வாகிகள் நடவடிக்கை குறித்தும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டும் என்பது குறித்தும் சசிகலாவுடன் தினகரன் ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டி.டி.வி. தினகரன் சசிகலாவை சந்திப்பதற்காக இன்று சென்னையிலிருந்து பெங்களூரு புறப்பட்டார்.
தினகரனுடன், வெற்றிவேல், இன்பதுரை, பார்த்தீபன், தங்க தமிழ்செல்வன், ஜக்கையன், கதிர்காமு உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களும் சசிகலாவை சந்திக்க உள்ளனர்.
இந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் நிலவரம் அதிமுக அம்மா அணி நிர்வாகிகள் நடவடிக்கை குறித்தும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டும் என்பது குறித்தும் சசிகலாவுடன் தினகரன் ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.