சென்னையில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் செயல்படும் சுமார் 2000 கடைகளுக்கு சுகாதார துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழக முழுவதும் டெங்குக் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் தினமும் பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் சில இடங்களில் உள்ள 2000 கடைகளுக்கு சுகாதாரத்துறை அனுப்பிய நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில்,
நீர் தேங்குவதற்கு ஏதுவான டயர் உள்ளிட்ட கழிவு பொருட்களை 48 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும். பழைய பொருள் அகற்றாவிட்டால், 6 மாத சிறைத்தண்டனை, ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் மற்றும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளையும் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் பொது சுகாதார துறை இயக்குனர் மரு. குழந்தைசாமி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
டெங்கு ஒழிப்பு தடுப்பு நடவடிக்கை பணிகளில் ஈடுபட்டு வரும் மருத்துவ குழுவினரை நேரில் சந்தித்து, அதன் விபரங்களை கேட்டறிந்தார்.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. ஆனால் இவற்றை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரும், சுகாதாரச் செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணனும் கூறி வருகின்றனர். எனினும் மாநிலத்தில் டெங்கு மரணங்கள் தவிர்க்க முடியாதவையாக இருந்து வருகின்றன.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் டெங்கு காய்ச்சலுக்கு கோபாலபுரம் டிஏவி பள்ளி மாணவன் பார்கவ் பலியாகியுள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
டெங்கு என்பது Aedes கொசுக்களால் பொதுவாக பரவும் ஒரு வைரஸ் தொற்று நோய் ஆகும். சிக்கன்குனியாவின் பரப்புக்கு Aedes கொசு தான் பொறுப்பாகும். இது பெரும்பாலும் முன்னணியில் உள்ள சுகாதார கவலைகள் மற்றும் வெக்டார்களுக்கான பாதுகாப்பு ஆகியவற்றை முதன்மையாக முன்னுரிமை அளிக்கிறது.
சமீப காலங்களில் இருந்து டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 945. மேலும் டெல்லியில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகின்றன். கடந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டும், டெல்லி / என்.சி.ஆர். பகுதிகள் ஆபத்தில் சிக்கியுள்ளன.
டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் :-
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்களின் மகள் பிரியங்கா காந்தி, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முன்னதாக கடந்த 23ஆம் தேதி காய்ச்சல் காரணமாக பிரியங்கா காந்தி டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பரிசோதனைக்கு பிறகு அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது.
தற்போது அவருக்கு டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனை தலைவர் ராணா தெரிவித்துள்ளார். உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.