தமிழகத்தில் 131 இடங்களில் எலிசா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது : அமைச்சர் விஜயபாஸ்கர்
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 747 சிறப்பு மருத்துவர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் 131 இடங்களில் எலிசா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர், தமிழகம் முழுவதும் காய்ச்சல் வரக்கூடிய பகுதிகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் மற்றும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளையும் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் பொது சுகாதார துறை இயக்குனர் மரு. குழந்தைசாமி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
டெங்கு ஒழிப்பு தடுப்பு நடவடிக்கை பணிகளில் ஈடுபட்டு வரும் மருத்துவ குழுவினரை நேரில் சந்தித்து, அதன் விபரங்களை கேட்டறிந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.