பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சட்டத்தை கையில் எடுத்தக்கொள்பவர்களை கண்காணிக்க அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
பசு பாதுகாப்பு என்ற பெயரில் சமூக விரோதிகள் அரங்கேற்றும் வன்முறை சம்பவங்களைத் தடுக்க சமூக ஆர்வலர் தெக்சீன் பூனவல்லா சுப்ரீம் கோர்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை கடந்த ஏப்ரல் மாதம் விசாரித்த சுப்ரீம் கோர்ட் பசு பாதுகாப்புப்பின் பெயரால் தலித் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக விளக்கமளிக்க ஆறு மாநிலங்களுக்கு உத்தரவிடப்பட்டது.
பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என ராஜஸ்தான் ஐகோர்ட் பரிந்துரை செய்துள்ளது. மேலும் பசுவை இறைச்சிக்காக வெட்டுவோருக்கு ஆயுள்தண்டனை விதிக்கவும் பரிந்துரை செய்துள்ளது.
இறைச்சிகாக மாடுகள் உட்பட சில கால்நடைகள் விற்கக் கூடாது என மத்திய அரசு புதிய உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என ராஜஸ்தான் ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. அதோடு பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்வதை மத்திய அரசு தடை செய்துள்ளது.
இதைக்குறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டதாவது:
விவசாயம் செய்ய மட்டுமே மாடுகளை விற்பனை செய்யவோ, வாங்கவோ முடியும். கசாப்பு தொழிலுக்காக, இறைச்சி தேவைக்காக விற்பனை செய்ய முடியாது. பசு, ஒட்டகம், காளை, எருமை மாடுகளை வாங்கவோ, விற்கவோ முடியாது. மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறை மூலம், நாடு முழுக்க மாட்டிறைச்சி விற்பனை கூடங்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
பசுக்களுக்கும் ஆதார் அடையாள அட்டை வழங்கும் திட்டம் கூடிய விரைவில் வருகிறது.
கடந்த வருடமும் பசுக்களுக்கு ஆதார் அடையாள அட்டை என்ற நகர்வானது கேளிக்கை மற்றும் விமர்சனத்திற்கு உள்ளாகியது, இப்போது மத்திய அரசு உயர்மட்ட அளவில் இவ்விவகாரத்தை தெளிவு செய்து உள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் மண்டசூர் என்ற ஊரில் உள்ள ரயில் நிலையத்தில் மாட்டு இறைச்சியுடன் வந்த இரு முஸ்லீம் பெண்களை ஒரு கும்பல் சரமாரியாக அடித்து உதைத்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தின் கிர்-சோம்நாத் மாவட்டத்தில் உள்ள உனா என்ற இடத்தில் இறந்த பசு ஒன்றின் தோலை உரித்ததாக தலித் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பயங்கர தாக்குதலை கண்டித்து நேற்று குஜராத்தின் சவுராஷ்டிரா என்ற பகுதியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.