மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தாவே இன்று டெல்லியில் மரணம் அடைந்தார்.
இவர் 1956-ம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் பிறந்தார். இளைமை காலத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்து, பாஜனதாவில் தன்னுடைய அரசியல் வாழ்க்கையை தொடங்கியவர். பாராளுமன்ற மாநிலங்களவையில் கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து எம்.பி.யாக உள்ளார்.
நடிகர் கமல் ஹாசனின் அண்ணன் சந்திராஹாசன் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
பரமக்குடியில் பிரபல கிரிமினல் வழக்கறிஞராக திகழ்ந்த டி. சீனிவாசன் மகனாக 1936-ம் ஆண்டு பிறந்த சந்திர ஹாசனும் வழக்கறிஞர் பட்டம் பெற்றவராவார்.
நடிகர் கமலின் அண்ணனும், ராஜ்கமல் இண்டர்நேஷ்னல் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகியுமான சந்திரஹாசன் சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டுவந்தார். அவர் லண்டனில் உள்ள தனது மகள் அனுஹாசன் வீட்டில் வசிந்துவந்தார். 82 வயதான சந்திரஹாசனுக்கு நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
சந்திராஹாசனின் மறைவுக்கு திரையுலகப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி (வயது 82) இன்று அதிகாலை சென்னையில் காலமானார்.
துக்ளக் இதழின் ஆசிரியர், நடிகர், பிரபல எழுத்தாளர் என தன்மை கொண்டவர் சோ ராமசாமி. சோ ராமசாமி சென்னையில் பிறந்தவர். இவர் 14 திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 200 திரைப்படங்களில் நடித்துள்ளார். நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார். நான்கு தொலைக்காட்சிப் படங்களுக்குக் கதை எழுதி இயக்கி நடித்தும் உள்ளார்.
ஜெயலலிதாவும், சோ ராமசாமி நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர். அரசியலில் ஜெயலலிதாவுக்கு சோ ராமசாமி ஒரு சிறந்த ஆலோசகாக இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறந்த நடிகை மட்டுமின்றி, மிகச் சிறந்த குரல்வளமும் மிக்கவராக திகழ்ந்தவர். ஜெயலலிதா அவர்களுக்கு பிடித்த ஒரு ஹிந்தி பாடலை பாடிய வீடியோ உள்ளது.
ஆளுநர் வித்யாசாகர் ராவ், மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடு மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் இறுதி அஞ்சலி செலுத்தினர். மேலும் சசிகலா அம்மையார் அவர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
21 குண்டுகள் முழுங்க முழு அரசு மரியாதையுடன் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இந்திய ராணுவ முப்படை அதிகாரிகள் முன்னிலையில் அலங்கரிக்கப்பட்ட ராணுவ பீரங்கி வாகனத்தில் ஜெயலலிதாவின் உடல் ஏற்றப்பட்டது. ராணுவ பீரங்கி வாகனம் மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம் நோக்கி சென்று கொண்டு இருக்கிறது அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் துக்கம் தாங்க முடியாமல் கதறி அழுதனர்.
உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் போயஸ் கார்டனில் அவர் வாழ்ந்த வேதா இல்லத்தில் இருந்து , மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ராஜாஜி ஹாலுக்கு எடுத்து செல்லப்பட்டது.
மஞ்சள் காமாலையால் அவதிப்பட்டு வந்த தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 41.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்தவர் நா.முத்துக்குமார். இயக்குநராக வேண்டும் என்ற முனைப்பில் பாலுமகேந்திராவிடம் உதவியாளராகப் பணியாற்றினார். சீமான் இயக்கிய வீரநடை படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஆனார்.
பிரபல பட அதிபர் பஞ்சு அருணாசலம் உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 75.
1941-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி பிறந்த தனது இளமைப் பருவத்தில் கவிஞர் கண்ணதாசனின் உதவியாளராக பணியாற்றியதன் மூலம் சினிமா துறையில் நுழைந்தவர்.
அன்னக்கிளி, ப்ரியா, உல்லாச பறவைகள், கழுகு உள்பட 15 படங்களை தயாரித்தார். அன்னக்கிளி படத்தில் இளையராஜாவை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார். 8 படங்களை டைரக்டு செய்துள்ளார். இயக்குநர், எழுத்தாளர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.