பத்திரிக்கையாளர் சோ காலமானார்: பிரதமர் மோடி இரங்கல்

மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி (வயது 82) இன்று அதிகாலை சென்னையில் காலமானார்.

Last Updated : Dec 7, 2016, 10:42 AM IST
பத்திரிக்கையாளர் சோ காலமானார்: பிரதமர் மோடி இரங்கல் title=

சென்னை: மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி (வயது 82) இன்று அதிகாலை சென்னையில் காலமானார்.

துக்ளக் இதழின் ஆசிரியர், நடிகர், பிரபல எழுத்தாளர் என தன்மை கொண்டவர் சோ ராமசாமி. சோ ராமசாமி சென்னையில் பிறந்தவர். இவர் 14 திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 200 திரைப்படங்களில் நடித்துள்ளார். நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார். நான்கு தொலைக்காட்சிப் படங்களுக்குக் கதை எழுதி இயக்கி நடித்தும் உள்ளார்.

ஜெயலலிதாவும், சோ ராமசாமி நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர். அரசியலில் ஜெயலலிதாவுக்கு சோ ராமசாமி ஒரு சிறந்த ஆலோசகாக இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சோ ராமசாமி பற்றி மோடி டிவிட்டரில் வெளியிட்ட செய்தி:-

சோ ராமசாமி மரியாதைக்குரிய மற்றும் பன்முக தன்மை திறன் கொண்டவர். அவர் சிறந்த தேசப்பற்றாளர். எதற்கும் அச்சமற்ற குரல் கொடுக்கும் அவர் அனைவராலும் பாராட்டப்பட்டார்.

அனைத்திற்கும் மேலாக சோ ராமசாமி எனது நெருங்கிய நண்பர். சோ. ராமசாமி வெளிப்படை தன்மை கொண்டவர். அறிவாளி. அவரது மறைவு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்திற்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். 

மேலும் சோ. ராமசாமி ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றது பற்றி வீடியோவையும் பிரதமர் வெளியிட்டுள்ளார்.

 

Trending News