கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதுபற்றி அமெரிக்க பார்லிமென்ட் ஆய்வு செய்து வருகிறது. மேலும், இது தொடர்பாக அமெரிக்க உளவு அமைப்பான எப்.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விசாரணையை நடத்தி வந்த எப்.பி.ஐ.யின் இயக்குனர் ஜேம்ஸ் கோமியை சமீபத்தில் அதிபர் டிரம்ப் அதிரடியாக பதவி நீக்கம் செய்தார். இந்நிலையில் தனது பதவி நீக்கம் தொடர்பான அமெரிக்க செனட் சபையின் விசாரணையின் போது, ஜேம்ஸ் கோமி பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார்.
இந்திய ராணுவத்துக்கு வலுசேர்க்கும் விதமாக இந்த அதிநவீன எஸ்-400 ரக ஏவுகணையை இந்தியாவுக்காக வழங்க ரஷ்யா முடிவெடுத்துள்ளது. மேலும் இரு நாட்டுப் பிரதிநிதிகளும் இதுகுறித்த பேச்சுவார்த்தையில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இரு நாட்டின் நலனையும் கருத்தில்கொண்டு, 12 ஒப்பந்தங்களில் இந்தியா- ரஷ்யா இடையே கையெழுத்தானது. இந்த ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளின் இறுதியில் இந்தியாவுக்காக மிகவும் அதி நவீன எஸ்-400 ரக ஏவுகணையை வழங்கத் தயார் என ரஷ்யா அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக புகார் தொடர்பாக, அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் மருமகனிடம் விசாரணை நடத்த எப்.பி.ஐ., முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு ஆதரவாக ரஷ்யா தலையீடு இருந்ததாக புகார் கூறப்பட்டது. இதனை டிரம்ப் தரப்பு மறுத்து இருந்தது.
இந்நிலையில் தற்போது வெள்ளை மாளிகை ஆலோசகராக இருக்கும் டிரம்ப்பின் மருமகன் குஷ்னர் ரஷ்ய தூதர் செர்ஜே கிஸ்லயக் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த வங்கி உயரதிகாரி செர்ஜே கோர்கோவை சந்தித்து பேசியுள்ளது தொடர்பாக செய்தி வெளியானது.
ரஷ்ய ஹாக்கர்கள் மற்றும் எப்பிஐ இயக்குநர் கோமே ஆகியோரே தனது தேர்தல் தோல்விக்கு காரணம் என அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஹிலரி கிளிண்டன் கூறினார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி கூறியதாவது:-
கடந்த வருடம் அக்டோபர் 27-ம் தேதி தேர்தல் நடந்திருந்தால், நான் அதிபராகியிருப்பேன். தேர்தலில் தோல்விக்கு நானே பொறுப்பேற்று கொள்கிறேன்.
ரஷ்யாவில் மெட்ரோ ரயில் நிலையத்தில் நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பில் 10 பேர் பலியாகினர். ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ் பர்க் நகரில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் பயங்கர குண்டு வெடித்தது. இதில் 10 பேர் பலியாகினர்.
குண்டுவெடிப்பை அடுத்து செயின்ட் பீட்டர்ஸ் பர்க் நகரில் உள்ள 3 மெட்ரோ ரயில் நிலையங்களூம் மூடப்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் மின்னஞ்சல்களை அதனுடைய வலைதளத்தில் திருட்டுத்தனமாக புகுந்து திருட
ஆணையிட்டர் என்பதையும், அற்கான நோக்கத்தையும் அடுத்தவாரம் வெளியிடப் போவதாக அமெரிக்க தேசிய உளவு துறை தலைவர் ஜேம்ஸ் கிளாப்பர் கூறியிருக்கிறார். இதில் தாங்கள் ஈடுபடவில்லை என்று ரஷ்யா மறுத்துள்ளது. ஆனால். ரஷ்ய அதிகாரிகள் மீது அமெரிக்கா தடைகளை விதித்திருக்கிறது.
அமெரிக்க தேர்தல்களில் வெளிநாடுகளின் தலையீடு இருந்ததற்கான அறிக்கை வியாழக்கிழமை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிடம் வழங்கப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.