ரஷ்யாவின் தலையீடு உறுதி செய்த அமெரிக்க உளவு துறை!!

Last Updated : Jan 6, 2017, 02:13 PM IST
ரஷ்யாவின் தலையீடு உறுதி செய்த அமெரிக்க உளவு துறை!! title=

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் மின்னஞ்சல்களை அதனுடைய வலைதளத்தில் திருட்டுத்தனமாக புகுந்து திருட 

ஆணையிட்டர் என்பதையும், அற்கான நோக்கத்தையும் அடுத்தவாரம் வெளியிடப் போவதாக அமெரிக்க தேசிய உளவு துறை தலைவர் ஜேம்ஸ் கிளாப்பர் கூறியிருக்கிறார். இதில் தாங்கள் ஈடுபடவில்லை என்று ரஷ்யா மறுத்துள்ளது. ஆனால். ரஷ்ய அதிகாரிகள் மீது அமெரிக்கா தடைகளை விதித்திருக்கிறது.

அமெரிக்க தேர்தல்களில் வெளிநாடுகளின் தலையீடு இருந்ததற்கான அறிக்கை வியாழக்கிழமை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிடம் வழங்கப்பட்டது.

அவர்களுடைய கூற்றுபடி, ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலரி கிளிண்டனை குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டிரம்ப் தோற்கடிக்க மாஸ்கோ உதவியதாக குறிப்பிடப்படுகிறது.

ஆனால், அமெரிக்க தேர்தல் நடைமுறையில் ரஷ்யா தலையிட்டு, தான் வெற்றியடை துணைபுரிந்ததாக கூறப்படுகின்ற குற்றச்சாட்டை அமெரிக்க அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து நிராகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் தொடர்பு இருந்ததாக உளவு துறை தெரிவிப்பதற்கு முன்பு வரை, தான் உளவு துறையின் மிக பெரிய ரசிகராக விளங்கியதாக டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக, 35 ரஷ்ய ராஜீய அதிகாரிகளை அமெரிக்காவில் இருந்து வெளியேற்றியிருக்கும் ஒபாமா நிர்வாகம், ரஷ்ய உளவு துறையால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் இரண்டு வளாகங்களை மூடியிருக்கிறது.

தன்னுடைய பதில் நடவடிக்கையாக ஒபாமா போதியளவு செயல்படவில்லை என்று செனட் அவை உறுப்பினர் வின்ட்சே கிரஹாம் தெரிவித்திருக்கிறார்.
"பஞ்சு உருண்டைகளை எறிகின்ற தருணம் இதுவல்ல. கற்களை எறிய வேண்டிய தருணம் இதுவாகும்" என்று அவர் கூறியிருக்கிறார்.

இந்நிலையில், கிளாப்பருக்கு பதிலாக உளவு துறை இயக்குநராக முன்னாள் இந்தியானா செனட் அவை உறுப்பினர் டான் கோட்ஸ் நியமிக்கப்படுவார் என்ற அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்பின் அணியினர் அமெரிக்க ஊடகங்களிடம் தெரிவித்திருக்கின்றனர்.

Trending News