தமிழகம் முழுவதும் 2வது தவணையான போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. இந்த முகாம் இன்று மாலை 5 மணி வரை நடைபெறும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் 7.5 லட்சம் குழந்தைகளுக்கு 1640 மையங்களில் சொட்டு மருந்து வழங்க முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் 2வது தவணையான போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை காலை 7 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் 7.5 லட்சம் குழந்தைகளுக்கு 1640 மையங்களில் சொட்டு மருந்து வழங்க முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு புதிய ஆட் விளம்பரமானது பேஸ்புக்கில் சுமார் 6.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறது, இவ்வாறு இது ஏன் பிரபலமானது என்பதை நீங்கள் அறிந்துகொண்டே ஆக வேண்டும்!
குழந்தைகளுக்கு விரல் ரேகை பதிவு செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சென்னை கொடுங்கையூரில் சாலையில் கனமழையால் காரணமாக வெள்ளம் போல் தண்ணீர் தேங்கி நின்றதில், அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கியதில் இரு சிறுமிகள் (யுவஸ்ரீ, பாவனா) உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், சென்னை கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 சிறுமிகளின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் தல 10 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கொடுங்கையூரில் சாலையில் கனமழையால் காரணமாக வெள்ளம் போல் தண்ணீர் தேங்கி நின்றதில், அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கியதில் இரு சிறுமிகள் (யுவஸ்ரீ, பாவனா) உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
இந்நிலையில், சென்னை கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 சிறுமிகளின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கொடுங்கையூரில் சாலையில் கனமழையால் காரணமாக வெள்ளம் போல் தண்ணீர் தேங்கி நின்றதில், அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கியதில் இரு சிறுமிகள் (யுவஸ்ரீ, பாவனா) உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
இந்நிலையில், இன்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுமிகள் யுவஸ்ரீ மற்றும் பாவனாவுக்கு அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
மத்திய பிரதேசத்தில் உள்ள மக்கள், தங்கள் குழந்தைகளை மாட்டு சாணத்தின் மீது படுக்கவைத்து வழிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
மத்தியபிரதேச மாநிலம், பெத்தூரில் உள்ள மக்கள் தங்கள் குழந்தைகளை கோவர்த்தன பூஜையின் போது, மாட்டு சாணத்தின் மீது படுக்க வைத்து வழிபாடு நடத்தினர்.
இத்தகு வேண்டுதல்கள் மூலம் தங்கள் குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடனும், நோய் தொற்று இல்லாமல் நீண்ட நாள் வாழ வழிவகுக்கும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
ராஜஸ்தானின் ஜலவார் பகுதியில், நேற்று இரவு டிராக்டர் ஒன்று குடியிருப்பினில் நுழைந்ததில் 3 குழந்தைகள் பலியாகினர்!
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜலவார் பகுதியில், டிராக்டர் ஓட்டுனர் ஒருவரு குடித்துவிட்டு வாகனத்தை ஒட்டியதில் தவறுதலாக குடியிருப்பு ஒன்றில் வாகனத்தினை விட்டார்.
Rajasthan: 3 children dead after an allegedly drunk tractor driver drove into a house last night in Jhalawar; Bodies sent for post-mortem pic.twitter.com/XnYVN5UI2r
சிகரெட், பீடி விற்கப்படும் கடைகளில் சாக்லேட் விற்க மத்திய சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், சாதாரண பெட்டி கடைகளில் சிகரெட், பீடி போன்ற புகையிலை பொருட்கள் விற்கப்படுகின்றன. அதே கடைகளில் பிஸ்கட், குளிர்பானங்கள், சாக்லேட் போன்ற உணவுப் பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகள் உயிரிழந்த அதிர்ச்சியை அடுத்து, ஃபருகாபாத் மருத்துவமனையில் கடந்த 30 நாட்களில் 49 குழந்தைகள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தப்பிரதேசம் மாநிலம் ஃபருகாபாத் மாவட்டத்தில் உள்ள ராம் மனோகர் லோகியா ராஜ்கியா சிகிட்சாலே மருத்துவமனையில் கடந்த 30 நாட்களில் 49 குழந்தைகள் உயிரிழந்துள்ளது.
கடந்த ஜூலை 20-ம் தேதி முதல் ஆகஸ்ட் 21-ம் தேதி வரை ஆக்ஸிஜன் மற்றும் மருந்துகளின் பற்றாக்குறை காரணமாக 49 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கடந்த 2 நாட்களில் 42 குழந்தைகள் உயிரிழந்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
இந்த விபத்தில் 7 குழந்தைகள் மூளை அலர்ஜி காரணமாகவும் மற்றவர்கள் மற்ற காரணங்களுக்காகவும் பலியாகியுள்ளர். இந்த தகவலை பி.ஆர்.டி. மருத்துவ கல்லூரி முதல்வர் பி.கே. சிங் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம், நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பான விசாரணைக்கு, மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.