நடிகர் சோனு சூத் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். தனது சமூக ஊடக கணக்கில் இதை தெரிவித்த நடிகர் சோனு சூத், தனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2.33 லட்சத்திற்கும் அதிகமானோர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,300 பேர் இறந்த நிலையில், இந்தியா மிக அதிக ஒற்றை நாள் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
மக்களை சிரிக்க வைப்பது சாதாரண விஷயமல்ல. ஆனால் விவேக்கின் நகைச்சுவையோ சிரிக்க வைப்பதோடு அனைவரையும் சிந்திக்க வைத்து, அதன் படி செயல்படவும் வைத்தது. சிரிப்போடு சேர்த்து சிந்தனையையும் ஊட்டிய அவரது கருத்துகளை நாம் மறக்க முடியாது.
நடிகர் விவேக்குக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், அவர் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவீர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.
நடிகர் விவேக்கின் தற்போதைய நிலையைப் பற்றி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அவருக்கு, கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படவில்லை என்று மருத்துவமனை கூறியுள்ளது. அவருக்கு கொரோனா தொற்றும் இல்லை என்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில், 256 குழந்தைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலையில், குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருவது பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
புதுடெல்லி: இந்தியாவில், மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருபுறம், தடுப்பூசியை போட்டுக்கொள்ளும்படி அரசாங்கம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டு வருகிறது. மறுபுறம் கொரோனா தொற்று எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு வேகமாக அதிகரித்து வருகின்றது.
தற்போது, இந்தியாவில் ஏழு நிறுவனங்கள் சேர்ந்து 38.80 லட்சம் ரெம்டெசிவிர் டோஸ்களை உற்பத்தி செய்கின்றன. மேலும் ஏழு தளங்களில் 6 நிறுவனங்கள் மூலம் 10 லட்சம் டோஸ் கூடுதலாக உற்பத்தி செய்ய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலைக்கு மத்தியில், அதிகமான மக்களை கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி ஊக்கப்படுத்தும் வகையில், மத்திய வங்கி (செண்ட்ரல் பாங்க்) நிலையான வைப்புத் தொகை சார்ந்த ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
நாட்டின் மொத்த கொரோனா வைரஸ் எண்ணிக்கை இப்போது 1.36 கோடியாக உயர்ந்துள்ளது, அவற்றில் 12.6 லட்சம் பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இதுவரை மொத்தம் 1,22,53,697 பேர் குணமடைந்துள்ளனர், 71,058 பேர் வைரஸுக்கு பலியாகியுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 6, 2021) காலை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 96,982 பேர் கோவிட் -19 தொற்றுநோயால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இப்போது 1.25 கோடியாக உயர்ந்துள்ளது. அவற்றில் சுமார் 1.16 கோடி பேர் குணமடைந்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.