திருப்பத்தூர் ஆட்சியர் உத்தரவை எதிர்த்து செயல்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இரு கிராம மக்களிடையே மோதல் ஏற்படும் சூழல் உள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
நடிகர் சூர்யா அவர்கள் தனது NGO மூலம் நிறைய உதவிகளை செய்துள்ளார். நிறைய நல்ல விசியங்களை செய்து வருகிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும் என நடிகையும் பாஜக செயற்குழு உறுப்பினருமான குஷ்பு சுந்தர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடரும் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கையாக 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் (நவம்பர் 10 மற்றும்11) விடுமுறை என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து 20 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால், ஆற்றிற்கு குளிக்கச் செல்வது செல்பி எடுக்க செல்வது ஆகியவற்றை தவிர்க்குமாறு பொதுமக்களை சேலம் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.
2015 ஆம் ஆண்டு சென்னை பெருவெள்ளத்தின்போது ஏற்பட்ட அனுபவத்தைப் பாடமாகக் கொண்டு மழை நீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கையை சென்னை மாநகராட்சி எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்ததை மேற்கோள்காட்டி, கடந்த 2015-க்கு பிறகு தற்போது வரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? என அரசுத் தரப்பிடம் கேள்வி எழுப்பினர்.
தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்டவர்களை தங்கவைப்பதற்காக 5 ஆயிரத்து 106 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
விவசாயி ராஜசேகர் (Farmer Rajasekar) ஆற்றை கடக்க முயன்றபோது உறவினர் ஒருவர் ராஜசேகரை எச்சரித்தவாரு எடுத்த வீடியோ (Viral Video) சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சில மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிக்கு நகரக் கூடும்.
இன்று காலை முதல் கள்ளக்குறிச்சி, வேலூர், நெல்லை, திருவாரூர், விழுப்புரம், கடலூர் என ஆறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளனர்.
இலங்கை கடலோரப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தின் சில பகுதிகளில், கன மழை பெய்யக் கூடும் என வானிலை அறிக்கை கூறுகிறது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த மூன்று நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகரக்கூடும்.
வங்க கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.