முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின் படியே தற்போதைய ஆட்சியும் அடிபிறழாமல் பார்த்து வருகிறது என துணை முதல்வர் ஓ.பன்னிர் செல்வம் தெரிவித்துள்ளார்!
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணல் ஓரிரு மாதங்களில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்!
தூத்துக்குடி ஸ்டர்லைட் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பொதுமக்களின் மீதான வழக்குகளை நீக்க வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இரண்டு மாத பரோல் முடிவடைந்த நிலையில் இன்று மீண்டும் சிறைக்கு திரும்பினார் பேரறிவாளன்!
கடந்த 26 வருடமாக சிறையில் இருந்த பேரறிவாளன் ஆகஸ்ட் 24-ஆம் தேதி பரோலில் விடுவிக்கப்பட்டு, ஜோலார்ப்பேட்டையில் இருக்கும் தனது வீட்டுக்கு வந்தார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இவர் கடந்த 1991-ம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். 26 ஆண்டுகள் கழித்து பரோல் கிடைத்துள்ளது.
பேரறிவாளனுக்கு சிறைவிடுப்பு அளிக்க வேண்டுமென அவரது தாயார் அற்புதமம்மாள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தார். இதனையடுத்து பேரறிவாளனுக்கு ஒரு மாத காலம் பரோலில் செல்ல தமிழக அரசு அனுமதி அளித்தது.
தமிழக மக்களுக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தனது ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்:
பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணாக்கர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும் வகையில் பயிற்சி மையம் அமைக்கப்படுமென தமிழக முதல்வர் தெரித்துள்ளார்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்:-
தன் மகனை பரோலில் விடுவித்தமைக்கு பேரறிவாளன் தாயார் திருமதி. அற்புதம்மாள் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று (செப்டம்பர் 1) தலைமை செயலகத்தில், பேரறிவாளன் தாயார் திருமதி. அற்புதம்மாள் சந்தித்து, தனது மகன் பேரறிவாளனை பரோலில் விடுவித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்கள்.
கடந்த 26 வருடமாக சிறையில் இருந்த பேரறிவாளன் ஆகஸ்ட் 25ஆம் தேதி பரோலில் விடுவிக்கப்பட்டு ஜோலார்ப்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று (ஆகஸ்ட் 29) தலைமைச் செயலகத்தில் நபார்டு வங்கியின் தலைவர் டாக்டர் ஹர்ஷ் குமார் பன்வாலா அவர்களை சந்தித்து, தமிழ்நாட்டின் மேம்பாட்டிக்கு தேவையான நிதி உதவியினை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பின்போது தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைதச்சர் பெருமக்கள், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோவன், மற்றும் முக்கிய தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.
அணிகள் இணைபிற்கு பிறகு இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இணைந்து நிழற்குடையை திறந்து வைத்தனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று(23.8.2017) அரியலூர் நகரத்தில், பேருந்து பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வின்போது தமிழக துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் அவர்களும், அரசு தலைமை கொறடா திரு. ராஜேந்திரன், மாநிலங்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம், அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் க.லட்சுமி பிரியா ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழகம் ஆளும் அ.தி.மு.க சமிபகாலமாக பல்வேறு பரபரப்பான சூழ்நிலைகளை ஏற்படுத்தி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக இன்று கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பெங்களூர் சிறைச்சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை சந்தித்து பேசினார்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு இன்று தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.