இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார். அவருக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கேஹர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
விழாவில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, துணை ஜனாதிபதி அமீது அன்சாரி, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள் பங்கேற்றனர். முன்னதாக ராம்நாத் கோவிந்த் குதிரைப்படை வீரர்களால் அழைத்து வரப்பட்டார்.
25-ம் தேதி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ராம்நாத் கோவிந்த் பதவியேற்கவுள்ள நிலையில், தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாளை ஓய்வு பெறுகிறார்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி நம் நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அவர்களது ஆயுள்காலம் வரை அவர்கள் விரும்பும் பகுதிகளில் வாடகை, மின்சாரம் மற்றும் குடீநீர் கட்டணம் இல்லாமல் வீடு வழங்கப்பட வேண்டும். இதற்காக, டெல்லி ராஜாஜி மார்க் பகுதியில் உள்ள பங்களாவில் பிரணாப் முகர்ஜி நாளை குடியேறுகிறார்.
கம்பாலா எருது போட்டிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
கம்பாலா போட்டியில் வெற்றி பெறும் விவசாயிகளுக்கு பரிசுகள், பாராட்டு வழங்கப்படும். 100 ஆண்டுகள் பழமையான இது கர்நாடகாவில் பாரம்பரிய விளையாட்டாக இருந்து வருகிறது.
ஜல்லிக்கட்டு போல, கம்பாலாவுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, கர்நாடக அரசு அவசர சட்ட மசோதாவை அம்மாநில சட்டசபையில் நிறைவேற்றியது. இதனையடுத்து, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த இம்மசோதாவுக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
பீகாரில் ஆளுநராக இருக்கும் ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி வேட்பாளராக அதிகாரபூர்வமாக அறிவிப்பு செய்த பாராதிய ஜனதா கட்சி.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் ஜூலை 17-ம் தேதி நடைபெறுகிறது.
எனவே புதிய ஜனாதிபதியை போட்டியின்றி தேர்ந்து எடுக்க பாஜக விரும்பியது. ஆனால் பாஜக வேட்பாளரை எதிர்த்து காங்கிரஸ் தலைமையில் எதிர்கட்சிகள் சார்பில் போட்டி வேட்பாளர் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. இதையடுத்து, அந்த பதவிக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான வேட்பாளர் அறிவிப்பை விரைவில் பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளியிடுகின்றன.
இந்நிலையில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, இன்று காஞ்சிபுரம் வருகிறார். அரக்கோணம், 'ராஜாளி' கடற்படை தளத்தின் விமான தளத்தில் இருந்து, கார் மூலம் காஞ்சிபுரத்திற்கு, பகல், 2:00 மணிக்கு வருகிறார்.
திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் விழா மற்றும் 60 ஆண்டு கால சட்டமன்ற உறுப்பினர் பணியை கவுரவிக்கும் வகையில் சட்டப்பேரவை வைர விழாவும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று மாலை கோலாகலமாக நடைபெற்றது.
விழா மேடை தமிழக சட்டப்பேரவை வடிவில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்த விழாவுக்கு, திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்கினார். கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார். முதன்மை செயலாளர் துரைமுருகன் அனைவரையும் வரவேற்றார்.
திமுக தலைவர் கருணாநிதியை இன்று அவரது இலத்தில் சந்தித்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின்.
திமுக தலைவர் கருணாநிதி இன்று தனது 94-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி கோபாலபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் மு.க.ஸ்டாலின் அவரை சந்தித்தார்.
கருணாநிதி பிறந்த நாளையொட்டி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், கேரள ஆளுநர் சதாசிவம், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு திமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
கடந்த 1924-ம் ஆண்டு ஜூன் மாதம் 3-ம் தேதி திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் திமுக தலைவர் கருணாநிதி பிறந்தார். இளம் வயது முதல் பொது வாழ்வில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
இன்று அவர் சட்டப்பேரவையில் அடியெடுத்து வைத்து 60 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் விதமாகவும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வைரவிழா:-
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதில் ஆளும் பாஜக-வும், எதிர்கட்சிகளும் இறங்கி உள்ளன.
மாநில கட்சிகளை இணைத்து, பாஜக-வுக்கு எதிரான கூட்டணி அமைத்து, அதன் சார்பில் பொது வேட்பாளை முடிவு செய்வதற்காக காங்கிரஸ் தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.
குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தனி விமானம் மூலம் கோவை வந்த பிரதமர் ஹெலிகாப்டர் மூலம் உதகை சென்றார். பிரணாப் முகர்ஜியை விமான நிலையத்தில் உள்ளாட்சி அமைச்சர் வேலுமணி, ஆட்சியர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
உதககையில் உள்ள லாரன்ஸ் பள்ளியின் 159-வது ஆண்டு விழா இன்று நடைப்பெறுகிறது. இந்த பள்ளியின் ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று உதகை வந்தடைந்துள்ளார். பிரணாப் முகர்ஜி வருகையை ஒட்டி உதகையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாராக்கடன்களை வசூலிப்பதற்கான அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
வங்கிகளுக்கு பெரும் சுமையாக உள்ள வாராக்கடன்களை வசூலிக்கும் வகையில் வேண்டுமென்றே வங்கிகளை ஏமாற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவசர சட்டத்திற்கு நேற்று முன்தினம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
டெல்லியில் 64-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. ஜனாதிபதி விருதுகளை வழங்கினார்.
சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டிருந்த ஜோக்கர் திரைப்படம் தேசிய திரைப்பட விருதை பெற்றது. சிறந்த திரைப்படத்திற்கான விருதும் ஜோக்கர் படம் பெற்றது.
சிறந்த பாடகருக்கான தேிய விருதை சுந்தர் ஐயர் பெற்றார். ஜோக்கர் படத்தில் ஜாஸ் மீனு என்ற பாடல் பாடியதற்காக பாடகர் சுந்தர் ஐயருக்குவிருது வழங்கப்பட்டது.
வைரமுத்து தர்மதுரை படத்தில் இடம் பெற்றுள் எந்த பக்கம் என்ற பாடலுக்காக சிறந்த பாடலாசரியர் விருது பெற்றார். இவர் தேசிய விருது பெறுவது 7-வது முறையாகும்.
பாரத ரத்னா விருதுக்கு பிறகு இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதான பத்ம விருதுகள் கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இதில், பத்ம விபூஷன் விருதுக்கு பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் தேர்வாகியிருந்தார். கர்நாடக இசையுலகிலும், பின்னணி பாடலிலும் தன்னிகரற்ற பங்களிப்பை வழங்கியதற்காக யேசுதாஸ் இந்த விருதுக்கு தேர்வாகியிருந்தார்.
7 பேருக்கு பத்ம விபூஷன் விருதும், 7 பேருக்கு பத்மபூஷன் விருதும், 75 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டன.
ஜிஎஸ்டி தொடர்பான நான்கு துணை மசோதாக்களுக்கு இன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கினார்.
நாடு முழுவதும் ஒரே சீரான வரியை அமல்படுத்தும் நோக்கில் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பை அமல்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
ரூ.1,590க்கு டிஜிட்டல் பரிமாற்றம் செய்த நபர், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் ‛லக்கி கிரஹாக் யோஜனா' தேர்வில் மெகா பரிசான ரூ. 1 கோடியை வென்றார்.
'டிஜிட்டல்' முறையில் பணம் செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், அதை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் அதன் மூலம் வர்த்தகம் செய்யும் வர்த்தகர்களுக்கு, குலுக்கலில், ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.
பத்ம விருது வழங்கும் விழாவில் ரியோ பாராலிம்பிக்ஸ் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு, தீபா மாலிக், விகாஸ் கவுடா, சேகர் நாயக், ஆகியோருக்கும் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
மேலும் இந்த விழாவில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ், ரியோ ஒலிம்பிக் வீரர்கள் சாக்ஷி மாலிக், உடற்பயிற்சியாளர் திபா கர்மாகர் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் கேப்டன் கோலி, கிரிக்கெட்டின் அனைத்து விதமான போட்டிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.
பத்ம விருது வழங்கும் விழாவில் விராத் கோலிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று குடியரசுத்தலைவர் மாளிகையில் நடந்த விருது வழங்கும் விழாவில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் கையால் பத்மஸ்ரீ விருதை விராத் கோலி பெற்றார்.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் விராத் கோலி கூறியதாவது:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.