இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவுதினத்தையொட்டி டெல்லி சாந்திவனம் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி!!
ஜவஹர்லால் நேரு நவம்பர் 14-ம் தேதி 1889-ம் ஆண்டு பிறந்தார். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆவார். இவரை பண்டிட் நேரு, பண்டிதர் நேரு என்றும் அழைப்பர். இவர் குழந்தைகள் மேல் மிகுந்த அன்பு கொண்டவர். இவரின் பிறந்த தினத்தை தான் நாம் குழந்தைகள் தினம் கொண்டடிவருகிறோம்.
இவர் இந்தியா, 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றபோது அதன் முதலாவது தலைமை அமைச்சராகப் பதவியேற்றார். இவர் 1964, மே 27-ம் தேதி காலமாகும் வரை இப்பதவியில் வகித்து வந்தார்.
இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடியான ஜவஹர்லால் நேரு காங்கிரசு கட்சியினால் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1952-ல் நடந்த இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் காங்கிரசு வெற்றி பெற்றது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராகப் பதவி ஏற்றார் ஜவஹர்லால் நேரு. அணி சேரா இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான இவர், போருக்குப் பின்னான காலத்தில் அனைத்து உலக அரசியலில் மிக முக்கிய நபராக திகழ்ந்தார்.
Delhi: Former PM Dr.Manmohan Singh and Congress President Rahul Gandhi pay tribute to #JawaharLalNehru on his death anniversary pic.twitter.com/b4lJGum6EY
— ANI (@ANI) May 27, 2018
இன்று ஜவஹர்லால் நேருவின் நினைவுதினத்தையொட்டி, டெல்லி சாந்திவனம் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
Tributes to our first Prime Minister, Pandit Jawaharlal Nehru on his death anniversary.
— Narendra Modi (@narendramodi) May 27, 2018
இதேபோல் பிரதமர் நரேந்திர மோடியும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜவஹர்லால் நேருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.