இந்துவாவை சேர்ந்த பாஜக தொண்டர் ரெமித் என்றவர் குத்திக்கொலை செய்யப்பட்டதால் கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் பினராய் என்ற இடத்தில் இந்துவா நிர்வாகி ரெமி மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து கேரளாவில் இன்று முழு அடைப்பிற்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. இதனால் கேரளாவில் அரசுப் பேருந்துகள் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனையொட்டி தமிழகத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், சில நாட்களுக்கு முன்பு, மகாத்மா காந்தியை கொலை செய்தது ஆர்.எஸ்.எஸ். தான் என பேசினார். இது தொடர்பாக அவர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பை குறித்து விமர்சித்த காங்கிரஸ் துணை தலைவர் ராகுலுக்கு சுப்ரீம் கோர்ட் நெருக்கடி கொடுத்துள்ளது.
சமீபத்தில் ராகுல்காந்தி அவர்கள் ஆர்.எஸ்.எஸ். குறித்து விமர்சனம் செய்திருந்தார். அதாவது மகாத்மா காந்தியை சுட்டு கொன்ற ஆர்.எஸ்.எஸ் காரர்கள் என்று விமர்சித்திருந்தார். இது தொடர்பாக அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு எப்போது ஆட்சியில் அமர்ந்ததோ அது முதல் சமஸ்கிருதத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் 300 குருகுல கல்வி நிறுவனங்களை நிறுவ ஆர்.எஸ்.எஸ். இயக்கம் முடிவு செய்துள்ளது. மேலும் இத்திட்டத்துக்கு முழு ஆதரவு தருவதாக மத்திய அரசு கூறியுள்ளது. இது பெரும் சர்ச்சையை உருவாக்கிள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.