திமுகவினர் மீது ஐடி ரெய்டு நடப்பது குறித்து பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி, லஞ்சம் வாங்கியவர்களை வைத்து ரைடு செய்வது என்ன நியாயம்? உள்ளங்காலில் இருந்து உச்சந்தலை வரை ஊழல் செய்திருப்பவர் மோடி என விமர்சித்துள்ளார்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையாகும் நபர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து நல்வழிப்படுத்தும் அந்த டாஸ்மாக் ஊழியருக்கு தமிழக அரசு சார்பில் சன்மானம் வழங்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்றாலும் ஆட்சியைக் கலைக்கும் யோசனை இல்லை என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கருத்து! ஆட்சியைக் கலைத்துதான் பார்க்கட்டுமே என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர் மர்மக் காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் எண்ணிக்கையை தமிழக அரசு அதிகரித்திருப்பதாக தெரிவித்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்வு செய்யப்படாதவர்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
வருகிற 9-ந்தேதி, 10-ந்தேதி விடுமுறை மற்றும் சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு 8-ந்தேதி வெள்ளிக்கிழமை கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
49 சிறைவாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் முதலமைச்சரின் பரிந்துரையின் மீது ஆளுநர் இன்னும் முடிவெடுக்கவில்லை என தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மக்களை திசை திருப்பவும், ஏமாற்றவும் சனாதனம் என்ற ஆயுதத்தை திமுக கையில் எடுத்திருப்பதாக விமர்சித்திருக்கும் ஜெயக்குமார், அமைச்சராக இருக்க தகுதியில்லாதவர் உதயநிதி ஸ்டாலின் என சாடியுள்ளார்.
பிரபல தனியார் பத்திரிக்கை ஒன்றில் காலை உணவுத்திட்டத்தை மோசமாக விமர்சித்து முதல்பக்கத்தில் வெளியான கட்டுரைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இதுகுறித்த விரிவான தொகுப்பை தற்போது காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.