இன்று அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அ உருவாகக்கூடும்.
Madras HC On Medicines: அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் வினியோகிக்கப்படுவதை தடுப்பது குறித்து கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
புழல் சிறையில் ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் விவகாரம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தவும், ராம்குமாரின் தந்தைக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
அனைத்து சுயநிதி பள்ளிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை கல்விக் கட்டணமாக நிர்ணயம் செய்ய வேண்டும் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்; மழை மட்டுமின்றி புயலினை எதிர்கொள்ளவும் அரசு தயாராக உள்ளது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார்.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கையில், சமூகநீதியின் நிலைக்களமான தமிழ்நாட்டில், பாஜகவின் சனாதன கொள்கையை நுழைத்துவிட பெரும் சதித்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.
டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனுவை தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கும் என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், வேலுமணி தரப்பில் மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராக தமிழக அரசு தெரிவித்த ஆட்சேபத்தை நிராகரித்தது.
பெரியார் சிலை குறித்து சர்ச்சை வகையில் பேசியதாக தொடரப்பட்ட சினிமா 'ஸ்டன்ட் மாஸ்டர்' கனல் கண்ணனின் ஜாமின் மனுவை, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டதற்காக பதிவுசெய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஏ.பி.வி.பி. அமைப்பினர் தொடர்ந்த வழக்கில் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.