ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்....! இந்த மாதம் துவரம் பருப்பு வேணுமா? - அரசு முக்கிய அப்டேட்..!

Ration Card | ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய அப்டேட் கொடுத்துள்ளது. இந்த மாதம் துவரம் பருப்பு நீங்கள் வாங்கவில்லை என்றால் ரேஷன் கடைகளில் இப்போதே சென்று வாங்கிக் கொள்ளலாம்.

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 23, 2024, 07:24 AM IST
  • ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட்நியூஸ்
  • துவரம் பருப்பு உடனே வாங்கிக் கொள்ளுங்கள்
  • அமைச்சர் சக்கரபாணி கொடுத்த விளக்கம்
ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்....! இந்த மாதம் துவரம் பருப்பு வேணுமா? - அரசு முக்கிய அப்டேட்..! title=

Ration Card News Tamil | தமிழ்நாடு முழுவதும் இருக்கும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை கொடுத்திருக்கிறது. இந்த மாதம் துவரம் பருப்பு இதுவரை நீங்கள் வாங்கவில்லை என்றால், ரேஷன் கடைகளுக்கு சென்றால் உடனே வாங்கிக் கொள்ளலாம். துவரம் பருப்பு (Toor Dal) விநியோகம் தட்டுபாடு இருப்பதாக செய்திகள் பரவி நிலையில், உணவுப் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கம் கொடுத்துள்ளார். ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு தட்டுபாடே இல்லை என்றும், மக்கள் எப்போது ரேஷன் கடைகளுக்கு சென்றாலும் பருப்பு தட்டுப்பாடு இல்லாமல் விநியோகிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | ரேஷன் கடை இன்று திறந்திருக்கிறதா? வீட்டில் இருந்தபடியே இங்கே செக் செய்யுங்கள்

அமைச்சர் சக்கரபாணி கொடுத்துள்ள அந்த அறிக்கையில், " தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகளுக்குத் துவரம் பருப்பு போதுமான அளவு அனுப்பப்பட்டுள்ளது. தட்டுப்பாடு இல்லை. தமிழ்நாடு அரசு சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.25 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு (Ration Card Holders) மாதம்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ. 30-க்கும் ஒரு விட்டர் பாமாயில் ரூ. 25-க்கும் மானிய விலையில் வழங்கி வருகிறது. துவரம் பருப்பு விநியோகம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில்,  மருத்துவர் இராமதாஸ் சென்னை மாநகரில் உள்ள பெரும்பான்மையான நியாய விலைக் கடைகளில் நவம்பர் மாதத்திற்கான துவரம் பருப்பு இதுவரை வழங்கப்படவில்லை என்றும், சென்னையில் மட்டுமின்றி சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் நியாயவிலைக் கடைகளில் பருப்பு விதியோகிக்கப்படவில்லை என்றும் துவரம் பருப்பு விநியோகம் பற்றி முழுதும் அறியாமல் கூறியிருக்கிறார்.

நவம்பர்-2024 மாதத்தில் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களுக்கும் 2,03,84,122 கிலோ துவரம் பருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டு, நாளாது தேதி வரை 1,62,83.486 கிலோ வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் மாத ஆரம்ப இருப்பையும் (27,53,606 கிலோ) சேர்த்து 92% நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் 68,44,719 கிலோ துவரம் பருப்பு இருப்பு உள்ளது. அதுமட்டுமின்றி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகளில் 66,91,000 கிலோ துவரம் பருப்பு கையிருப்பு உள்ளது.

சென்னை மண்டலங்களைப் பொருத்தமட்டில் மொத்தமுள்ள 1794 கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 20,55,811 கிலோ துவரம் பருப்பில் 14,75,019 கிலோ வழங்கப்பட்டு நவம்பர் மாத ஆரம்ப இருப்பையும் (2,68,122 கிலோ) சேர்த்து 87% துவரம் பருப்பு நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. சென்னையைச் சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அவற்றிற்கான ஒதுக்கீட்டில் முறையே 96%, 94% மற்றும் 97% துவரம் பருப்பு நியாயவிலைக் கடைகளுக்குப் பொதுமக்களுக்கு விநியோகித்திட அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச்-2025 மாதம் வரை துவரம் பருப்பு மற்றும் பாமாயில் விநியோகம் சீராக நடைபெறுவதற்காக அந்த மூன்று மாதங்களின் தேவையான 6 கோடி கிலோ துவரம் பருப்பு மற்றும் 6 கோடி லிட்டர் பாமாயிலுக்கும் இன்று (22.11.2024) ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. ஆதலால், துவரம் பருப்பு விநியோகத்தில் எந்தவிதத் தட்டுப்பாடும் இல்லை. எதிர்காலத்திலும் தட்டுப்பாடுகள் ஏற்படாத வண்ணம் சீரிய முறையில் தொடர்ந்து அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது." என தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | ரேஷன் கடை ஊழியர்கள் மீது புகார் அளிப்பது எப்படி

மேலும் படிக்க | ரேஷன் கடை பயனாளிகளுக்கு நல்ல செய்தி... புதிய விதியை கொண்டு வந்த மத்திய அரசு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News