சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் ராட்சத மலைப்பாப்பின் வயிற்றில் இருந்து மனிதரின் காலணி சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள கிரீன் கிராஸ் ஜின்டாலே கால்நடை மருத்துவமனை-க்கு சமீபத்தில் ராட்சத மலைப்பாம்பு ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. ஒவ்வாததை விழுங்கி ஜீரனிக்க முடியாமல் தவித்து கொண்டிருந்த அந்த பாம்மினை மொமன்ட் ஒம்மே எனும் பாம்பு பிடிப்பவர் வனப்பகுதியில் இருந்து பிடித்து வந்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
மருத்துவ கண்கானிப்பில் கொண்டு செல்லப்பட்ட அந்த ராட்சத பாம்பினை பரிசோதிக்கையில் அது மனிதரின் செருப்பினை விழுங்கியுள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த பாம்பிற்க அருவை சிகிச்சை மேற்கொண்டு காலணியை அகற்றியுள்ளனர் அந்த மருத்துவமனை மருத்துவர்கள்,
இச்சம்பவம் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தினில் விரிவாக குறிப்பிட்டு, அந்த அறுவை சிகிச்சை வீடியோவினையும் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
காட்டில் பிடிக்கப்பட்ட பாம்பின் வயிற்றில் மனிதனின் காலணி எவ்வாறு சென்றது?... மிருங்களின் வீடான காட்டிற்கு செல்லும் மனிதர்கள் தங்களது உடைமகளை கழிவுகளாக காட்டில் விட்டு வருவதினாலே இவ்வாறான நிகழ்வுகள் நடக்க நேரிடுகிறது.