சீன அரசாங்கத்தின் "மனித உரிமை மீறல்கள்" காரணமாக 2022 பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
சீனாவின் மனித உரிமை மீறல்கள் காரணமாக, 2022 பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் அமெரிக்கா பங்கேற்கக்கூடாது என்று ஆர்வலர்கள் கூறிவரும் நிலையில், 2022 ஆம் ஆண்டில் பெய்ஜிங் ஒலிம்பிக்கை புறக்கணிப்பதை ஏற்கவில்லை என்று முன்னாள் அதிபர் டிரம்ப் கூறுவதாக, தி ஹில் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
"விளையாட்டுகளை புறக்கணிப்பது" விளையாட்டு வீரர்களுக்கு செய்யும் அநீதி ", உலகெங்கிலும் உள்ள நாடுகள் அமெரிக்காவின் இந்த புறக்கணிப்பை எள்ளி நகையாடும் என்று டிரம்ப் ஒரு நேர்காணலில் கூறினார். அதோடு, 2022 பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்கா கலந்துக் கொண்டு போட்டியிட வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்றும் டிரம்ப் கூறினார்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபரின் ஆட்சிக்காலத்தில் அவருக்கும், சீன அதிபர் ஜி ஜின்பிங் (Chinese President Xi Jinping) இடையில் பதட்டமான உறவு இருந்தது அனைவருக்கும் தெரியும். எனவே, டிரம்பின் இந்த கருத்து அனைவருக்கும் வியப்பைக் கொடுக்கிறது.
Also Read | North Korea: அமெரிக்காவுடன் மோதலுக்கு தயார்- சபதம் போடும் கிம்
டிரம்ப் சீனாவுடன் வர்த்தகப் போரில் ஈடுபட்டார் என்பதும், சீனாவின் வுஹானில் தோன்றியதாக நம்பப்படும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பாக, அந்நாட்டின் மீது தொடர்ந்து கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார் என்பதும் அனைவருக்கும் தெரியும்.
2020ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில், தற்போதைய அதிபர் ஜோ பிடனின் மகனுக்கும், சீனாவுக்குமான உறவு குறித்து பேசி சாடியதும் குறிப்பிடத்தக்கது.
உய்குர் முஸ்லிம்கள், திபெத்தியர்கள் மற்றும் ஹாங்காங் மக்களுக்கு எதிராக சீனா மேற்கொள்ளும் அராஜக போக்கை எதிர்க்கும் விதமாக பெய்ஜிங்கில் நடைபெறவிருக்கும் 2022 குளிர்கால ஒலிம்பிக்கை புறக்கணிக்குமாறு மனித உரிமைகள் குழுக்களின் கூட்டணி, உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
"பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிக்க வேண்டும் என அனைத்து நாடுகளின் தேசிய ஒலிம்பிக் குழுக்கள், ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் உட்பட அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம் என்று அந்த கூட்டணி கூறியது. "சீன அரசாங்கம் உய்குர் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்து, முன்னோடியில்லாத வகையில் அடக்குமுறை பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது கிழக்கு துருக்கிஸ்தான், திபெத், தெற்கு மங்கோலியா, ஹாங்காங் என அந்நாடு ஜனநாயகம் மீது முழுமையான தாக்குதல் நடத்துகிறது" என்று மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
Also Read | தப்பியோடிய மெகுல் சோக்ஸியை இந்தியா கொண்டு வரும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக தகவல்
அதேபோல் பெய்ஜிங்கில் நடைபெறவிருக்கும் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை ஒளிபரப்ப வேண்டாம் என்று தொலைக்காட்சி நிலையங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.
விளையாட்டுக்களை புறக்கணிப்பது ராஜதந்திர நிலையிலானது என்று கூறிய அமெரிக்க செனட் சபாநாயகர் நான்சி பெலோசி, அதற்குக் பரிந்துரைத்தார், ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துக் கொள்ள சீனாவுக்கு செல்வது என்பது, அந்நாட்டின் மீது தவறு ஒன்றுமில்லை என்று அமெரிக்கா கருதுவது போல் ஆகிவிடும் என்று கூறினார்.
இருப்பினும், விளையாட்டு வீரர்கள், போட்டிகளில் இருந்து வெளியேற வேண்டாம் என்று வலியுறுத்திய அமெரிக்க ஒலிம்பிக் குழு, இது "புவிசார் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு அல்ல" என்று கூறியுள்ளது.
Also Read | North Korea:கடுமையான உணவு பற்றாக்குறை, வாழைப்பழம் விலை ரூ.3000/கிலோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR