கேனரி தீவுகளில் உள்ள லான்சரோட் மற்றும் ஃபுயர்டெவென்ச்சுராவிற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு கடற்கரையில் இருந்து மணல், கற்கள் மற்றும் பாறைகளை எடுத்துச் செல்லக் கூடாது என்று கேனரி தீவுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. தவிர, இதற்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள், நினைவுப் பொருட்களை சேகரிக்கும் நோக்கில், மணல், கற்கள் போன்ற பொருட்களை எடுத்துச் செல்லும் பழக்கம் உள்ள நிலையில், இது தீவுகளின் சுற்றுச்சூழல் அமைப்பில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது என கேனரி தீவுகள் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
புகழ்பெற்ற "பாப்கார்ன் பீச்"
ஒவ்வொரு ஆண்டும் லான்சரோட் கடற்கரைகளில் இருந்து ஒரு டன் மணல் பொருட்களை இழக்கிறது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், புகழ்பெற்ற "பாப்கார்ன் பீச்" ஒவ்வொரு மாதமும் இரண்டு டன் மணலை இழக்கிறது என்றும் கூறப்படுகிறது. இதனால் கவலையடைந்த அதிகாரிகள், இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.
கடும் உத்தரவுகளை பிறப்பித்துள்ள கேனரி தீவுகள் நிர்வாகம்
நியூயார்க் போஸ்ட் பத்திரிக்கையில் வெளியான அறிக்கையில், கேனரி நிர்வாக கடும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. கடற்கரை பகுதிகளில் இருந்து கற்கள் அல்லது மணலை எடுத்தால் 128 பவுண்டுகள் (சுமார் ரூ. 13,450) முதல் 2,563 பவுண்டுகள் (2,70,000 இந்திய ரூபாய்) வரை அபராதம் விதிக்கப்படலாம். பாப்கார்ன் அளவிலான கூழாங்கற்களை எடுத்துச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு அதிகபட்சம் அபராதம் விதிக்கப்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | அமெரிக்காவில் வினோதம்... கிரீன் ஹவுஸ் வாயுக்களை கடத்திய நபர் மீது கடும் நடவடிக்கை!
சுற்றுசூழல் பாதிப்பு நிலைமை காரணமாக எடுக்கப்பட்ட முடிவு
சுற்றுலாப் பயணிகளால் எடுத்துச் செல்லப்படும் பொருட்களால், கடற்கரையோரங்களின் இயற்கை சமநிலையை சீர்குலைத்து ஆபத்தில் உள்ளதால், அதிகாரிகள் சவாலை எதிர்கொள்கின்றனர். Lanzarote மற்றும் Fuerteventura விமான நிலையங்களில் கைப்பற்றப்பட்ட பெரும்பாலான பொருட்கள் மூலம், சுற்றுலா பயணிகள், மணல் மற்றும் கூழாங்கற்களை எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டுள்ளது.
ஏழு முக்கிய தீவுகளை உள்ளடக்கிய கேனரி தீவுகள்
கேனரி தீவுகள் ஏழு முக்கிய தீவுகளை உள்ளடக்கியது: டெனெரிஃப், கிரான் கனாரியா, லான்சரோட், ஃபுர்டெவென்டுரா, லா பால்மா, லா கோமேரா மற்றும் எல் ஹியர்ரோ. ஒவ்வொரு தீவுக்கும் தனித்தன்மையுடன் இயற்கை அழகை கொண்டது. இiதில் டெனெரிஃப் ( Tenerife) மிகப்பெரிய தீவு.
நீர் அவசரநிலையை அறிவித்த டெனெரிஃப்
டெனெரிஃப் சமீபத்தில் கடுமையான வறட்சி நிலைமைகள் காரணமாக நீர் அவசரநிலையை அறிவித்தது, சில அதிகாரிகள் சுற்றுலா பயணிகள் காரணமாக வளங்கள் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டினர். ஒரு ஹோட்டலில் ஒரு விருந்தினர் உள்ளூர்வாசியை விட நான்கு மடங்கு தண்ணீரைப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டது.
கடந்த ஆண்டு 5 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளுடன் ஒப்பிடும்போது ஒரு மில்லியனுக்கும் குறைவான மக்கள்தொகையுடன், வளங்கள் ம குறைவது தொடர்ந்தால் அது நிரந்திர பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் அஞ்சுகின்றனர். வறட்சியை எதிர்கொள்ளும் வகையில் தோட்டங்கள் மற்றும் குளங்களில் குடிநீரைப் பயன்படுத்துவதற்கு டெனெரிஃப் ஏற்கனவே தடை விதித்துள்ளது.
மேலும் படிக்க | உடலுறவு... அதுவும் மாணவியுடன் உணவக கழிவறையில் - பெண் ஆசிரியருக்கு வாழ்நாள் தடை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ