இஸ்லாமாபாத்: சீனா தயாரித்த COVID-19 தடுப்பு மருந்தின் மூன்று மருத்துவ பரிசோதனைகளை பாகிஸ்தான் தொடங்கியுள்ளது என்று நாட்டின் தேசிய சுகாதார நிறுவனத்தின் (NIH) நிர்வாக இயக்குநர் அமர் இக்ரம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய அந்த அதிகாரி, நாடு முழுவதும் 8,000 முதல் 10,000 தன்னார்வலர்களுக்கு இந்த தடுப்பு மருந்து வழங்கப்படும் என்றும் அதன் இறுதி முடிவுகள் சுமார் ஆறு மாதங்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார்.
முடிவுகளுக்குப் பிறகு, பாகிஸ்தான் அதை பொது மக்களுக்கு வழங்கத் தொடங்கும்.
இந்த தடுப்பு மருந்து ஏற்கனவே விலங்குகளுக்கு பாதுகாப்பானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது மனிதர்களுக்கும் பாதுகாப்பானதாக நிரூபிக்கப்படும் என்று அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன.
தேசிய சுகாதார சேவைகள் தொடர்பான நாட்டின் பிரதமரின் சிறப்பு உதவியாளர் பைசல் சுல்தானும் தடுப்பு மருந்து (Vaccine) குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளித்தார். மருத்துவ பரிசோதனை வெற்றி பெற்றால் அது பாகிஸ்தானியர்களுக்கு மட்டுமல்ல, உலகிற்கும் பயனளிக்கும் என்று அவர் கூறினார்.
ALSO READ: பாகிஸ்தானில் பெண்களை கற்பழிப்பவர்களில் பெரும்பாலானோர் குடும்ப உறுப்பினர்களே!
இந்த தடுப்பு மருந்தை சோதனை செய்வது பாகிஸ்தானுக்கு (Pakistan) ஒரு முக்கியமான விஷயமாகும் என்றார் சுல்தான். ஏனெனில் இது மற்ற வைரஸ் நோய்களுக்கு எதிராக தடுப்பு மருந்துகளை தயாரிப்பதற்கான நாட்டின் திறனை வளர்க்க உதவும் என்றார் அவர்.
இந்த தடுப்பு மருந்து சோதனைக்கு பாகிஸ்தானின் மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இது NIH மேற்பார்வையில் நிர்வகிக்கப்படும்.
பாகிஸ்தானில் இதுவரை 306,000 க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,420 பேர் இறந்துள்ளனர்.
இவை அனைத்தும் ஒரு புறமிருக்க, சீனா (China) தயாரித்த தடுப்பு மருந்தை பாகிஸ்தான் தன் மக்கள் மீது ஏன் சோதிக்கிறது என்ற கேள்வி பல தரப்பிலிருந்தும் வந்த வண்ணம் உள்ளது. சீனாவை திருப்திபடுத்த பாகிஸ்தான் தன் சொந்த மக்களை பலியாக்குகிறதா என்ற கேள்வியும் எழுகிறது. பாகிஸ்தான் மக்களில் பலர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ALSO READ: சீன அதிபர் Xi Jinping-ஐ கோமாளி என கூறிய நபருக்கு 18 ஆண்டுகால சிறை தண்டனை!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR