கராச்சி: தெற்கு பாக்கிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில் இரண்டு சரக்குக் கப்பல்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்துக்குள்ளன காட்சியின் வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது!
இந்த பதிவினை அக்கப்பலில் பயணித்த கப்பல்துறை தொழிளாலி ஒருவர் படம்பிடித்துள்ளார்.
சுமார் 3.31 நிமிடங்கள் ஒளிப்பரப்பாகும் இந்த வீடியோவானது, தெற்கு-ஆசியா போர்ட் டெர்மினல் லிமிடெட் பகுதியில் ஹம்பர்க் விரிகுடா கப்பலானது, போக்குவரத்து-கொள்கலன்களை சுமந்து செல்லும் ஹெபக்-லாயிட் கப்பலுடன் மோதிக்கொள்வதினை காட்டுவதோடு மட்டும் அல்லாமல் அத்தருணத்தில் கப்பலில் இருந்தவர்களின் மரண பயத்தினையும் படம் பிடித்துள்ளது.
பாக்கிஸ்தான் ஊடகங்களின் தகவல் படி இச்சம்பவமானது கடந்த மார்ச் 19-ஆம் நாள் நடைப்பெற்றுள்ளது. இந்த விபத்தில் பல கோடி மதிப்பிலான இறக்குமதி செய்யப்பட்ட கார்களை ஏற்றிச்சென்ற 21 கண்டெய்னர்கள் அரபிக்கடலில் மூழ்கியுள்ளது.
எனினும் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் காயம் இன்றி உயிர் தப்பினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.