புதுடெல்லி: கிழக்கு லடாக்கில் LAC பகுதியில் இந்தியா சீனா இடையே தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், இந்தியா சீனா இடையே மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald-Trump) மீண்டும் தெரிவித்துள்ளார்.
"இப்போது சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையில் பிரச்சனைகள் இருப்பதையும், மிகவும் பதட்டமான சூழல் இருப்பதையும் நான் அறிவேன். அவர்கள் அதை சரி செய்து கொள்வார்கள் என நான் நம்புகிறேன். எங்களால் செய்யக்கூடிய உதவி ஏதாவது இருந்தால், செய்யத் தயாராக இருக்கிறேன்.” என்று டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறினார்.
கிழக்கு லடாக்கில் LAC-ல் சீனப் பக்கத்தில் உள்ள மோல்டோவில் இந்தியாவிற்கும் (India) சீனாவிற்கும் இடையிலான ஆறாவது கார்ப்ஸ் கமாண்டர்- நிலையிலான சந்திப்பு நடந்த சில நாட்களுக்குப் பிறகு டிரம்பின் கருத்துக்கள் வந்துள்ளன. இமயமலையில் தங்கள் சர்ச்சைக்குரிய எல்லை பகுதிக்கு அதிகமான துருப்புக்களை அனுப்புவதை நிறுத்த இரு நாடுகளும் அந்த பேச்சுவார்த்தைகளில் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 29 மற்றும் 30 தேதிகளில் இரவு பாங்கோங் ஏரியின் (Pangong Lake) தென் கரையில் சீனா இந்தியப் பகுதிகளை ஆக்கிரமிக்க முயன்றதைத் தொடர்ந்து கிழக்கு லடாக்கின் நிலைமை மோசமடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் 7 ஆம் தேதி, சீனத் துருப்புக்கள் இந்திய தளங்களை ஆக்கிரமிக்க முயன்று தோற்றுப் போயின. பாங்காங் ஏரியின் தெற்கு கரையில் உள்ள ரெசாங்-லா ரிட்ஜிலினின் முக்பாரி பகுதியில் காற்றில் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது.
ALSO READ: நிரந்திர வெள்ளை மாளிகை வேந்தன் நான்... அமெரிக்க அதிபர் Donald Trump அதிரடி..!!!
இந்த மாத தொடக்கத்தில், இந்தியா-சீனா எல்லையில் உள்ள நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்று டிரம்ப் குறிப்பிட்டார். மேலும் அதில் ஈடுபடவும் உதவவும் விரும்புகிறேன் என்றும் கூறியிருந்தார்.
"நாங்கள் அங்கு நடப்பவற்றை கவனித்து வருகிறோம். இந்தியா சீனாவைப் பற்றி பேசினால், அங்கு எல்லைப் பகுதியில் மிக அதிக பதற்றம் உள்ளது. இது மிகவும் மோசமானதாக உள்ளது” என்று டிரம்ப் கூறியிருந்தார்.
சீனா (China) இந்தியாவை தொந்தரவு செய்து சீண்டுகிறதா என்று கேட்கப்பட்டபோது, அது அப்படியல்ல என்று தான் நம்புவதாகக் கூறிய அவர், ஆனால் சீனா “நிச்சயமாக அதை மிக தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. யாருக்கும் புரியாத அளவிற்கு சீனா இந்த விஷயத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது” என்று ட்ரம்ப் பதிலளித்தார்.
இந்தியா சீனா இடையே மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்கா (America) கூறி இருப்பது இது முதன் முறையல்ல. இதற்கு முன்னரும், டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளார். அதற்கு இந்தியா, சீனா என இரு நாடுகளுமே எதிர்மறை பதில்களையே அளித்துள்ளன.
ALSO READ: Viral Video: ‘வேண்டாம்…..விட்டுடு’ என வடிவேலு style-ல் அழும் சீன வீரர்கள்!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR