டிவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தியதிலிருந்து, அவ்வவ்போது அதிரடி நடவடிக்கைகளை எடுத்து சில சமயங்களில் பணியாளர்களுக்கும், சில சமயங்களில் ட்விட்டர் பயனாளிகளுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகிறார். முதலில் வருவாயைப் பெருக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக ப்ளூ டிக் பெற சந்தா செலுத்தும் முறையைக் கொண்டுவந்தார். மேலும், விளம்பரத்திற்கு அப்பால் வருவாய் ஈட்ட ட்விட்டர் பிரபலங்களின் குறிப்பிட்ட பதிவுகளைப் படிக்க கட்டணம் செலுத்தும் முறை பற்றிய அறிவிப்பு இந்த மாதத்தின் தொடக்கத்தில் வெளியானது. மேலும், ட்விட்டர் API பயன்படுத்தப்படுத்தும் டெவலப்பர்களிடம் இருந்து ட்விட்டர் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது
அந்த வகையில், இப்போது பயனர்களுக்கு சில புதிய கட்டுப்பாடுகள் விதித்து எலான் மஸ்க் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, சந்தா செலுத்திய அதிகாரப்பூர்வ பயனாளர்கள், அதாவது ப்ளூ டிக் பெற்ற பயனாளிகள் நாளொன்றுக்கு 6 ஆயிரம் பதிவுகளை படிக்க முடியும். சந்தா செலுத்தாமல் நீண்ட நாட்களாக டிவிட்டரை பயன்படுத்துவர்கள், ஒரு நாளைக்கு 600 பதிவுகளை மட்டுமே வாசிக்கலாம். மேலும், புதிதாக டிவிட்டருக்கு நுழைபவர்கள், நாளொன்றுக்கு 300 பதிவுகளை மட்டுமே பார்க்க முடியும் என புதிய கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
எனினும், தற்போது பதிவிட்ட புதிய டிவீட்டில், எலான் மஸ்க் மூலம் ட்விட்டர் விதிகளில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இனி ப்ளூ டிக் பயனர்கள் ஒரு நாளைக்கு 10,000 ட்வீட்களை மட்டுமே பார்க்க முடியும் என்று அறிவித்துள்ளார். அதே போல் ப்ளூ டிக் இல்லாத பயனர்கள் 1000 ட்விட்களை மட்டுமே பார்க்க முடியும். அதே சமயம் ட்விட்டரில் புதிதாக இணையும் புதிய பயனாகள் 500 ட்வீட் மட்டுமே பார்க்கும் வகையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளதாக தகவ்ல வெளியாகியுள்ளது.
மேலும், முன்னதாக, ட்விட்டரில் கணக்கு இல்லாதபோதும் ட்வீட்களை பார்வையிடும் வசதி இதுவரை இருந்தது. இனி அந்த வசதியும் ட்விட்டரில் இருக்காது. எந்த ஒரு ட்வீட்டைப் பார்க்க வேண்டும் என்றாலும், நீங்கள் ட்விட்டரில் ஒரு கணக்கு வைத்திருக்க வேண்டியது அவசியம். அதாவது ட்விட்டர் கணக்கு தொடங்கவோ அல்லது ஏற்கெனவே உள்ள கணக்கில் லாக் இன் செய்யவோ வேண்டும். இனி, அதற்குப் பின் தான் ட்விட்டரில் பதிவுகளைப் பார்க்க முடியும். நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் ட்விட்டர் தரவை கொள்ளை அடிக்கின்றன என்றும் இது ட்விட்டர் பயனர் அனுபவத்தை பாதிக்கிறது என்றும் எலோன் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு தேவையில்லை! அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு
முன்னதாக, OpenAI நிறுவனம் தனது சாட்ஜிபிடி (ChatGPT) போன்ற செயற்கை நுண்ணறிவு சாட் போட்களில், ட்விட்டர் தரவைப் பயன்படுத்தி மாதிரிகளாகப் பயன்படுத்தி பயிற்றுவிப்பதற்காக ஏற்கெனவே எலான் மஸ்க் அதிருப்தி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது பயனர்கள் எத்தனை ட்வீட்களைப் படிக்கலாம் என்பதை ட்விட்டர் கட்டுப்படுத்தும் என்று எலோன் மஸ்க் கூறுகிறார். அதிக அளவிலான தரவுகள் வீணாவதை தவிர்க்கும் நோக்கில் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ஆனால், டிவிட்டர் சேவையை முழுமையாக பெற சந்தா செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக பயனாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்தியாவில், டிவிட்டர் கணக்கு வைத்திருப்பவர்கள் ப்ளூ டிக் ஒரு மாதத்திற்கு 900 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நிலையில் பலரின் ப்ளூ டிக் மொத்தமாக காணாமல் போனது. இதில் பல செய்தி நிறுவனங்களின் ப்ளூ டிக்கும் அடங்கும். இந்நிலையில் தற்போது பதிவுகளை பார்ப்பதிலும் எலான் மஸ்க் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து ஏகப்பட்ட அளவிற்கு தரவுகளை எடுப்பதை எலான் மஸ்க் விரும்பவில்லையாம். இந்த தரவுகளை எடுத்து பலர் அதை வேறு இடங்களில் பயன்படுத்துகிறார்கள் என எலோன் மஸ்க் குற்றம்சாட்டி வருகிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ