நியூயார்க்: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் நிறுவனத்திற்கு $1.6 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டது, நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் தனிப்பட்ட வருமானத்தை திரித்துக் காட்டி வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, வரி மோசடி செய்ததற்காக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் நிறுவனத்திற்கு 1.6 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி ஏய்ப்பு விவகாரம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று டிரம்ப் மறுத்துள்ளார்.
சதி மற்றும் பொய்யான வணிகப் பதிவுகள் உள்ளிட்ட 17 குற்றங்களுக்காக (வரி தொடர்பான) கடந்த மாதம் தண்டனை விதிக்கப்பட்ட டிரம்ப்பின் நிறுவனத்திற்கு விதிக்கக்கூடிய ஒரே தண்டனை அபராதம் மட்டுமே என்று நீதிபதி ஜுவான் மானுவல் மெர்ச்சன் தெரிவித்தார். இந்த அபராதத் தொகை என்பது, சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச தொகை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அதிபருக்கு சொந்தமான டிரம்ப் கட்டிடங்களில் வாடகை இல்லாத அடுக்குமாடி குடியிருப்புகள், சொகுசு கார்கள் மற்றும் தனியார் பள்ளிக் கல்வி உள்ளிட்ட சலுகைகள் என பலவிதமாக வரி மோசடி செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | கொரோனா பலி எண்ணிக்கையை சொல்லாத சீனாவின் திட்டம் என்ன? WHO கவலை
தனது நிறுவனத்தில் பணிபுரியும் நிர்வாகிகள் சட்டவிரோதமாக வரி ஏய்ப்பு செய்தது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று டிரம்ப் மறுத்துள்ளார். டிரம்ப்பின் நிறுவனம்க், அதன் துணை நிறுவனங்களான டிரம்ப் கார்ப் என ஒவ்வொரு நிறுவனத்திற்கும் வெவ்வேறு தொகைகள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கின் தீர்ப்பின்போது, முன்னாள் அதிபர் டிரம்ப் அல்லது அவரது பிள்ளைகள் யாரும் நீதிமன்றத்தில் இல்லை. இந்தத் தீர்ப்புக்கு பிறகு டிரம்பின் நிறுவனக் குழுமம் வெளியிட்ட அறிக்கையில், தாம் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"உலகின் குற்றங்கள் மற்றும் கொலைகளின் தலைநகராக நியூயார்க் மாறியுள்ளது, இருப்பினும் அரசியல் காரணங்களுக்காக மேற்கொள்ளப்படும் இதுபோன்றா வழக்குகளால், டிரம்பை ஒன்றும் செய்ய முடியாது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | பாலியல் வாழ்க்கை பற்றி விசாரித்த பாகிஸ்தான் அதிகாரிகள்! இந்தியப் பெண்ணுக்கு கொடுமை
"இந்த ஊழல் நடைமுறைகள் அனைத்தும் டிரம்ப் அமைப்பின் நிர்வாக இழப்பீடு தொகுப்பின் ஒரு பகுதியாகும், மேலும் அந்த நிர்வாகிகளுக்கு அதிக சம்பளம் கொடுப்பதை விட இது நிச்சயமாக மலிவானது" என்று வழக்கறிஞர் ஒருவர் கூறினார்.
இந்த தீர்ப்பைக் கேட்ட் டிரம்பின் வழக்கறிஞர்கள், அபராதத்தை சற்று குறைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். ஏனெனில் ஒரே குற்றச்சாட்டிற்காக, பல கணக்குகளுக்கு அபராதம் விதிக்க சட்டத்தில் இடமில்லை என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.
டிரம்ப் நிறுவனங்களுக்கும் அபராதம் $750,000 அல்லது அதற்கும் குறைவாக இருந்திருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. அபராதம் செலுத்த நிறுவனம் 30 நாட்கள் அவகாசம் கேட்ட நிலையில், 14 நாட்களுக்குள் இந்த அபராதத் தொகையை செலுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் படிக்க | 2019 ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கான இழப்பீடு! அந்நாள் அதிபர் சிறிசேன வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ