அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்களன்று CNN மீது 475 மில்லியன் டாலர் நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்தார். டிரம்பில் அரசியல் எதிர்காலத்தை பாழாக்கும் முயற்சியில் CNN நெட்வொர்க் தொலைகாட்சி, தனக்கு எதிரான அவதூறு செய்திகளை பரப்பியதாக குற்றம் சாட்டியுள்ளார். புளோரிடாவின் ஃபோர்ட் லாடர்டேலில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், 2020 ஆம் ஆண்டு அதிபர்த் தேர்தலில் தன்னைப் பற்றி பரப்பட்ட அவதூறு செய்திகள் காரணமாக தான் அதிபர் தேர்தலில் தோற்க நேர்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அதிபர் ட்ரம்ப் தாக்கல் செய்துள்ள வழக்கில், CNN தொலைகாட்சி, ட்ரம்பை குறிக்கும் வகையில், "The Big Lie" என்ற ஒரு சொற்றொடரை, 7,700 முறைக்கும் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது . இந்த சொற்றொடர், மக்களிடம் தவறனா பிம்பத்தை ஏற்படுத்துவதற்கும், மக்களை தூண்டுவதற்கும் ஆன நோக்கம் கொண்டது," என்று அவர் கூறினார். இது குறித்து உடனடியாக CNN கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
மேலும் படிக்க | உக்ரைனில் போரினால் முடங்கிய விவசாய உற்பத்தி; வயல்களில் பொழியும் குண்டு மழை!
முன்னதாக, திங்களன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், மற்ற செய்தி நிறுவனங்களுக்கு எதிராக இதே போன்ற வழக்குகள் தாக்கல் செய்யப்படும் என்று டிரம்ப் கூறியிருந்தார். மேலும், அவர் தனது ஆதரவாளர்களால் ஜனவரி 6 அன்று கேபிடல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை விசாரிக்கும் ஹவுஸ் கமிட்டிக்கு எதிராக "தகுந்த நடவடிக்கை" எடுக்கப்படும் என்றார். 2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் அவர் போட்டியிட திட்டமிட்டு வரும் நிலையில் இந்த வழக்கு போடப்பட்டுள்ளது. CNN நிறுவனத்தின் புதிய தலைவர் கிரிஸ் லிசிட் மூன்று மாதங்களுக்கு முன்னர் ஒரு கூட்டத்தில் பேசுகையில், தனது செய்தி பணியாளர்களை தனிப்பட்ட முறையில் இந்த சொற்றொடரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | பத்து நாட்களில் ஐந்தாவது ஏவுகணை பரிசோதனை: அமெரிக்காவுக்கு சவால் விடும் வட கொரியா
டிரம்ப் அதிபராக இருந்த போதே, CNN தொலை காட்சி மீது பல குற்றசாட்டுக்களை சுமத்தியுள்ளார். முன்னதாக CNN தொலை காட்சியைப் போலவே பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளார். 2021, ஜனவரி6ம் தேதி அன்று, அமெரிக்க கேபிடல் கிளர்ச்சியைத் தொடர்ந்து, ட்விட்டர் தளத்தில் இருந்து, அவரை நீக்கிய ட்விட்டர் நிறுவனத்திற்கு எதிராக, வழக்கௌ தொடர்ந்தார். ஆனால், இந்த ஆண்டின் தொடக்கத்தில் கலிபோர்னியா நீதிமன்றத்தில், அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.மேலும் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக அவர் பதிந்த வழக்குகளும், எந்த ஆதாரமும் இல்லை என்று கூறப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது.
மேலும் படிக்க | ரஷ்யா உக்ரைன் போர்; தொடரும் ரஷ்ய தொழிலதிபர்களின் மர்ம மரணங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ