உலகை ஆட்டி படைத்து வரும் கொரோனா, சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் தான் கொரோனா வைரஸ் உருவாகியது என்பதற்கான ஆதாரம் புதிய ஆய்வு ஒன்றில் சிக்கியுள்ளது. வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியின் (Wuhan Institute of Virology) உயிர் பாதுகாப்பு நிலை -4 (Bio Safety Level 4 - B.S.L 4) ஆய்வகத்தில் கொரோனா வைரஸை சீன விஞ்ஞானிகள் தயார் செய்துள்ளனர். ஒரு புதிய ஆய்வில், விஞ்ஞானிகள் கண்டறிந்த வலுவான ஆதாரங்களின் அடிப்படையில் இந்த பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது
'கொரோனா வெளவால் மூலம் பரவவில்லை'
வைரஸைத் உருவாக்கிய பின், சீன (China) விஞ்ஞானிகள் அதை ரிவர்ஸ் என்ஜினீயரிங் வெர்ஷன் ( )மூலம் மாற்ற முயற்சித்தார்கள். இதன் வைரஸ் வெளவால்கள் மூலம் பரவியதாக காட்ட இவ்வாறு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. கொரோனா பரவல் எப்படி ஆரம்பித்தது என்பது தொடர்பான ஆய்வை பிரிட்டிஷ் பேராசிரியர் அங்கஸ் டால்க்லிஷ் (Angus Dalgleish) மற்றும் நார்வே விஞ்ஞானி டாக்டர் பிர்கர் சோரன்சென் (Birger Sorensen) ஆகியோர் மேற்கொண்டதாக டெய்லி மெயிலில் வெளியான செய்தி கூறுகிறது,
சீனாவில் வைரஸ்கள் குறித்த ரெட்ரோ-இன் ஜினீயரிங் சான்றுகள்
ஒரு வருடத்திற்கும் மேலாக சீனாவில் வைரஸ்கள் குறித்த ரெட்ரோ இன் ஜினீயரிங் தொடர்பான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக விஞ்ஞானிகள் எழுதியுள்ளனர். ஆனால் கல்வியாளர்களும் முன்னணி பத்திரிகைகளும் அதை மறுத்துள்ளனர். பேராசிரியர் டால்லிஷ் லண்டனில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பல்கலைக்கழகத்தில் புற்றுநோயியல் பேராசிரியர். டாக்டர் சோரன்சென் ஒரு வைராலஜிஸ்ட் என்பதோடு கொரோனாவின் தடுப்பூசியைத் தயாரிக்கும் இம்யூனர் என்ற நிறுவனத்தின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவிட் மாதிரி பரிசோதனையில் 'சிறப்பு கைரேகை' கிடைத்தது
இந்த ஆய்வில், வுஹான் ஆய்வகத்தில் தரவுகள் ஆதாரங்கள் வேண்டுமென்றே அழிக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. அதை மறைக்கவும் மறைந்து போக செய்யவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது என கூறப்படுகிறது. இது குறித்து குரல் எழுப்பிய விஞ்ஞானிகளை மவுனமாக்கியது அல்லது காணாமல் போகச் செய்தது. தடுப்பூசி தயாரிக்க தாங்கள் இருவரும் கொரோனாவின் மாதிரிகளைப் ஆராயும் போது, அவர்கள் வைரஸில் ஒரு 'சிறப்பு கைரேகை' இருப்பதை கண்டுபிடித்தார்கள். இது ஆய்வகத்தில் வைரஸைச் சேதப்படுத்திய பின்னரே சாத்தியமாகும் என்று அவர் கூறுகிறார்.
ALSO READ | மேற்கு வங்க மக்கள் நலனுக்காக பிரதமர் மோடியின் காலில் விழத் தயார்: மம்தா பேனர்ஜி
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR