Arrest Warrant Against Putin: நெதர்லாந்தில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ரஷ்யாவிற்கு சட்டவிரோதமாக குழந்தைகள் உள்பட அனைத்து மக்களையும் நாடுகடத்திய போர்க்குற்றத்திற்காக புதின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு எதிராக உக்ரைனில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்களுக்காக பிடிவாரண்ட்டை பிறப்பித்தது.
கூடுதலாக, இதேபோன்ற குற்றச்சாட்டில் ரஷ்யாவின் குழந்தைகள் உரிமைகளுக்கான ஆணையர் மரியா அலெக்ஸீவ்னா லவோவா-பெலோவாவுக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது. ரஷ்யா உலக குற்றவியல் நீதிமன்றத்தின் உறுப்பினர் இல்லை என்பதால், எந்த முகாந்திரத்தின் அடிப்படையில் நீதிமன்றம் புதின் உள்ளிட்டவர்களுக்கு எதிராக பிடிவாரண்டை பிறப்பித்தது என தெரியவில்லை.
மேலும் படிக்க | கோதுமை இன்றி தவிக்கும் மக்கள்! மறுபுறம் பதுக்கி வைக்கும் பாகிஸ்தான் அதிகாரிகள்!
BREAKING: The International Criminal Court announced today that it has issued an ARREST WARRANT for Vladimir Putin on suspicion of war crimes because of his involvement in abductions of children from Ukraine. pic.twitter.com/co9S6kwYun
— Jon Cooper (@joncoopertweets) March 17, 2023
பிப்ரவரி 24, 2022 அன்று ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து குற்றங்கள் நடந்ததாக ஐசிசி கூறியது. "குழந்தைகள் உள்ளிட்டவர்களை சட்டவிரோதமாக நாடுகடத்தியது உள்ளிட்ட பல குற்றங்களுக்கு புதின் தனிப்பட்ட விதத்தில் பொறுப்பாவார் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்று நீதிமன்றம் நம்புகிறது. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாக்க, பிடிவாரண்டுகள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை நாடுகளால் விசாரிக்க முடியாததை கடைசி முயற்சியாக விசாரிக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உள்ளது. ஐசிசி வழக்கறிஞர் கரீம் கான், ரஷ்யாவின் படையெடுப்புக்கு சில நாட்களுக்குப் பிறகு உக்ரைனில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரணையைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. தற்போதைய பிடிவாரண்ட்களுக்கு இவரின் செயல்பாடு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | உருளைகிழங்குடன் இதயத்தை சமைத்த கொலைக்காரன்... உறவினர்களையே குத்திக்கொன்ற கொடூரம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ