இஸ்லாமாபாத்: கடும் வறுமையில் வாடி வரும் பாகிஸ்தானுக்கு மேலும் பெரும் அடி விழுந்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் விளைவாக கடந்த நிதியாண்டில் டாலருக்கு எதிராக பாகிஸ்தானிய ரூபாய் 28 சதவீதம் அல்லது சுமார் 82 பாகிஸ்தான் ரூபாய் அளவுக்கு சரிந்துள்ளது என்று நிதி நிலை ஆராயும் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஜூன் 30, 2022 அன்று டாலரின் மதிப்பு 204.8 பாகிஸ்தான் ரூபாயாக இருந்த நிலையில், வங்கிகளுக்கு இடையிலான பரிவர்த்தனையில் செவ்வாயன்று டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு 286 ஆக சரிந்தது என்று தி நியூஸ் தெரிவித்துள்ளது.
இருப்பினும், பாகிஸ்தான் தினசரி அடிப்படையில் டாலருக்கு எதிராக 0.25 சதவீதம் அதிகரித்தது. திங்கட்கிழமை இறுதி விலை டாலருக்கு எதிராக 286.71 ஆக காணப்பட்டது. 2023ஆம் நிதியாண்டு பாகிஸ்தானுக்கு சவாலான ஆண்டாகும். இஸ்மாயில் இக்பால் செக்யூரிட்டிஸின் ஆராய்ச்சித் தலைவர் ஃபஹத் ரவூப், முக்கியமாக பாகிஸ்தான் ரூபாய் IMF-ன் அழுத்தத்திற்கு உள்ளாகியதாகக் கூறினார். 2024 நிதியாண்டு தேர்தல் ஆண்டாக இருப்பதால் மீண்டும் சவாலானதாக இருக்கும் என்று ரவூப் கூறினார்.
IMF கடனுக்காக பாகிஸ்தான் காத்திருக்கிறது
கராச்சியை தளமாகக் கொண்ட தரகு நிறுவனமான அரிஃப் ஹபீப் லிமிடெட், பாகிஸ்தானால் தற்போதைய நிதியை திரட்டமுடிந்தால், ரூபாயின் மீதான அழுத்தம் ஓரளவு குறையும் என்று மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இருப்பினும், வேறு ஏதேனும் ஐஎம்எஃப் திட்டத்தில் பாகிஸ்தான் இணைந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். கடனைத் திருப்பிச் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள சவால்களால் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1.1 பில்லியன் டாலர் தொகையை வெளியிட சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்திற்காக பாகிஸ்தான் காத்திருக்கிறது.
நாட்டின் கடன் திட்டம்
கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக முடங்கியிருந்த நாட்டின் கடன் திட்டம் ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது. மறுபுறம், பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தனது முழு பலத்தையும் பயன்படுத்தி சர்வதேச நாணய நிதியத்தை வற்புறுத்தினார். ஷாபாஸ் ஷெரீப் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவரை பலமுறை சந்தித்துள்ளார், இப்போது கடனின் அடுத்த தவணையை விரைவில் பெறலாம் என்று பாகிஸ்தான் அரசு கூறுகிறது. பாகிஸ்தான் சீனாவுக்கு சுமார் 30 பில்லியன் டாலர் கடன் சுமை உள்ளது, இது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது கராச்சி துறைமுகத்தை பணத்திற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸிடம் பாகிஸ்தான் ஒப்படைத்துள்ளது.
கழுதைகளை விற்க தயாராகும் பாகிஸ்தான்
சில நாட்களுக்கு முன் வெளியான செய்தியில், தீர்க்க முடியாத பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் பாகிஸ்தான், தற்போது தனது நாட்டு கழுதைகளை விற்க தயாராகி வருகிறது எனவும் அவற்றை வாங்க சீனா விருப்பம் தெரிவித்துள்ளது எனவும் செய்திகள் வெளியானது. நீண்ட காலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் பாகிஸ்தானின் கடன் சுமை அதிகரித்து, பணவீக்கம் உச்சத்தில் உள்ளது. அந்நாட்டின் நாணயத்தின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானிடம் அடிப்படை தேவைகளுக்கான பொருட்களை வாங்க பணம் இல்லை. ஒரு மாத இறக்குமதிக்கு தேவையான அந்நியச் செலாவணி கூட கையிருப்பில் இல்லாத நிலையில், கழுதைகள் விற்பனை, அந்நாட்டின் நிதிப் பிரச்சனையை சமாளிக்க ஓரளவு பலனளிப்பதாக இருக்கும் என கூறப்பட்டது.
மேலும் படிக்க | Pakistan: பொருளாதார சிக்கலின் உச்சம்! சொத்தை மூன்றாண்டு குத்தகைக்கு விட்ட பாகிஸ்தான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ