காதலுக்கு கண்கள் இல்லை என்று பலரும் கூற நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதேபோன்று, காதலுக்கு பாலினம், சாதி, மதம், இனம், வர்க்கம், மொழி, நிறம், வயது போன்றவை எதுவும் தேவையில்லை என்பதையும் பல்வேறு செய்திகள் உங்களுக்கு உறுதிப்படுத்தியிருக்கும். https://zeenews.india.com/tamil/topics/Pakistan
அந்த வகையில், பாகிஸ்தானில் வித்தியாசமான முறையில், மலர்ந்த காதல் கதை தற்போது வைரலாகியுள்ளது. செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்த ஒரு பெண்மணி, அவரின் காரின் ஓட்டுநரை காதலித்து திருமணம் செய்துள்ளார். ஓட்டுநரை திருமணம் செய்தது என்பதைவிட அதற்கான காரணம்தான் அனைவரையும் ஆச்சர்யப்படவைத்தது.
அதுகுறித்து அந்த பெண்மணி கூறுகையில்,"எனது முன்னாள் கார் ஓட்டுநர், இன்னாள் கணவராகியுள்ளார். அவர் எனக்கு கார் ஓட்டுவதற்கு கற்றுகொடுத்தார். அப்போது, அவர் காரின் கியர் மாற்றும் ஸ்டைலில் நான் மயங்கிவிட்டேன்.
மேலும் படிக்க | நாயை பலமுறை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் - சிக்கிய வீடியோ... பதறிய மக்கள்!
அவர் மிகவும் அழகாக, ரசனையான முறையில் கியரை மாற்றுவார். அந்த நேர்த்தியும், ரசனையும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கியர் மாற்றும் ஸ்டைல் அவரின் கரத்தை பிடிக்க வேண்டும் என என்னை தூண்டியது. தற்போது அவரை கரம்பிடித்துவிட்டேன்" என்றார். தற்போது இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். அவரின் கணவர் சிரித்துக்கொண்டே,"அந்த கார் தற்போது திருடுபோய்விட்டது" என வேடிக்கையாக கூறினார்.
இதேபோன்று, இந்தோனேஷியாவைச் சேர்ந்த 61 வயது கான் என்ற முதியவர் சமீபத்தில், தனது 88ஆவது திருமணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள சம்பவமும் நடந்துள்ளது. அவர் தனது 88ஆவது திருமணத்தில், 86ஆவது திருமணத்தில் மணந்துகொண்ட பெண்ணை மீண்டும் மணந்துகொள்ள இருப்பதாக தெரிகிறது. https://zeenews.india.com/tamil/topics/Indonesia
அதற்கு முன், 86ஆவது திருமணம் ஒரு மாதம் மட்டுமே நீடித்து எனவும், இருப்பினும் அந்த பெண் தற்போது கான் மீது காதலில் இருப்பதால் அவர் மீண்டும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. கானுக்கு எத்தனை பிள்ளைகள், பேரன்கள் என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ